தீக்கதிர் முக்கிய செய்திகள்
8 Jul 2026, 8:28 pm

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை ‘திருட்டு’ உலகளவில் இந்தியாவின் மதிப்பை களங்கப்படுத்திவிட்டது. இந்தியாவின் நற்பெயரை பாஜக அரசு கெடுத்து விட்டது.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து முக்கிய கோவில்களைப் போலல்லாமல், மோடி அரசு ராமர் கோவிலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கவில்லை. மேலும், அந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து இப்போது வெளிவரும் தகவல்கள், ஊழல்கள் நடக்கும்போதுதான் வெளிப்படுகின்றன. அவை தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கின்றன.

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைகளிலோ அல்லது 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. வன்முறையிலிருந்து மீண்டு வரும் சமூகங்களில், நீதிமன்றத் தீர்ப்புகள் மட்டுமே காயங்களை ஆற்ற முடியாது. அவர்கள் அங்கீகரிக்கப்படுவது முக்கியம்.

எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி

பிரதமரும், கல்வி அமைச்சரும் வினாத்தாள்கள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்க முன்வருவார்களா? முறையான விசாரணை நடத்தி மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அரசாங்கத்திடமிருந்து எந்தப் பலனும் கிடைக்காது என்ற சூழலில், நாடு முழுவதும் மாணவர்கள் ஒன்றுதிரண்டு தங்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதே இத்தகைய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியாக இருக்கும்.