உ.பி.,யில் எஸ்ஐஆர் நெருக்கடி காரணமாக 5 பிஎல்ஓ-க்கள் உயிரிழப்பு
27 Nov 2025, 3:11 pm
<p>லக்னோ பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) பணி அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாக ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 5 வாக்குச்சாவடி நிலை ஊழியர்கள் (பிஎல்ஒ) பலியாகியுள்ளனர். 3 பேர் மார டைப்புக் காரணமாகவும், 2 பேர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இந்நிலையில், எஸ்ஐஆர் நெருக்கடி காரணமாக இறந்த வாக்குச்சாவடி நிலை ஊழியர்கள் 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலை வர் அகிலேஷ் கோரிக்கை விடுத் துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எஸ்ஐஆர் பணி நெருக்கடி மரணங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களைப் போல உத்த ரப்பிரதேசத்திலும் தற்கொலை, மாரடைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. எஸ்ஐஆர் நெருக்கடி காரணமாக இறந்த வர்களின் குடும்பங்களுக்கு எங்கள் கட்சி சார்பில் ரூ. 2 லட்சம் வழங்க உள்ளோம். அதே போல 5 பேரின் உயிரிழப்புக்கு காரண மான தேர்தல் ஆணையம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண் டும்” என அவர் கூறியுள்ளார்.</p>
