தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வூதியக்கால வாழ்வைச்சிதைக்கும் ஒன்றிய அரசு வீதியில் இறங்கி போராட ஏ.கே.பத்மநாபன் அறைகூவல்

13 Jul 2026, 1:45 am
ஓய்வூதியக்கால வாழ்வைச்சிதைக்கும் ஒன்றிய அரசு   வீதியில் இறங்கி  போராட ஏ.கே.பத்மநாபன் அறைகூவல்
<p><strong>ஓய்வூதியக்கால வாழ்வைச்சிதைக்கும் ஒன்றிய அரசு வீதியில் இறங்கி போராட ஏ.கே.பத்மநாபன் அறைகூவல்</strong></p><p>சென்னை, ஜூலை 12- சென்னை இபிஎப் ஓய்வூதியர் சங்கத்தின் 2ஆவது மாநில மாநாடு கோவையில் வரும் 26ஆம் தேதி நடைபெறுவதை யொட்டி “இபிஎப் பென்சன் உயர்வு கிடைக்குமா? நாம் இனி என்ன செய்ய வேண்டும்?&quot; என்ற சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவொற்றியூரில் சனிக் கிழமை (ஜூலை 11) நடை பெற்றது. சென்னை பென்சனர் சங்கத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். எம்.ஆதிகேச வன் வரவேற்றார். இதில் கலந்து கொண்டு சிஐடியு முன்னாள் அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசுகை யில், தொழிற்சங்க இயக்க ங்கள் 1918 - 1920 காலகட்டத்தி லிருந்து தொடர்ச்சியாக போராடி வருகின்றன. 60ஆம் ஆண்டுகளில் இபிஎஃப் வந்த பிறகு, மூன்றாவது பலனாக ஓய்வூ தியம் வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் 1971இல் கொண்டு வரப்பட்ட குடும்ப ஓய்வூ தியத் திட்டம் தொழிலாளர்க ளுக்குப் பயன்படாத ஒரு ஏமாற்று வேலை என்பதை அன்றே சிஐடியு பொரு ளாதார ரீதியாக ஆய்வு செய்து நிரூபித்தது. தொடர்ந்து 90ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட பென்சன் திட்டமும் தொழிலாளர்களுக்குப் பாதகமானது என்பதை விளக்கி, அதற்கு எதிராக அகில இந்திய அளவில் சிஐடியு தனித்து நின்று வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் அரசின் துரோகமும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் பென்சன் திட்டத்தை மேம்படுத்து வோம் என நீதிமன்றத்தில் உறுதியளித்து, உச்ச நீதிமன்ற முத்திரையோடு இத்திட்டம் அமலானது. ஆனால், எதையெல்லாம் நல்ல அம்சங்கள் என்று அரசு நீதிமன்றத்தில் கூறி யதோ, அவை அனைத்தை யும் நாடாளுமன்ற விவா தத்திற்குக் கூட கொண்டு வராமல், தனித்தனி உத்தரவுகள் மூலம் அரசாங்கம் ஒழித்துக் கட்டி விட்டது. உயர் பென்சன் விவ காரத்திலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தையும் அரசு நாசம் செய்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டி னார். குறைந்தபட்ச பென்சன் முன்பு தொழிலாளர்க ளுக்கு வெறும் ரூ.2 மணி ஆர்டரில் பென்சன் வந்த அவல நிலையை சுட்டிக் காட்டிய அவர், தொடர் போராட்டங்களுக்கு பிறகே குறைந்தபட்ச பென்ஷன் 1000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது என்றார். 2014 தேர்தலின் போது அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் கையெழுத்திட மறுத்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் அது அமலானது. ஆனால் இன்று 85 லட்சம் பேரில் 35 லட்சம் பேர் 1000 ரூபாய்க்கு குறைவாகவே பென்ஷன் பெறுகிறார்கள். தொழிலாளர்களின் வயது மற்றும் சர்வீஸ் காலத்தைக் கணக்கிட்டு 500 ரூபாயும், 250 ரூபாயும் வழங்கும் மிகப்பெரிய மோசடியை இந்த அரசு செய்து வரு கிறது என்றார். ஒளிந்திருக்கும் ஆபத்துகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள &#39;இ.பி.எஃப் சட்டம் 2026&#39; மற்றும் புதிய தொழிலாளர் நலச்சட்டம் குறித்துப் பேசிய அவர், நவீன தொழில்நுட்பம் மூலம் அகில இந்திய அளவில் பி.எப் கணக்குகள் இணைக்கப்பட்டு, எளிதாக 75 சதவிகித பணத்தை முன் தொகையை எடுக்கும் வசதி (சலுகை போல) கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஆபத்து ஒளிந்திருக்கிறது. தங்களின் சொந்தப் பணத்தை வேலை காலத்தில் எடுக்கும் தொழிலாளர்கள், 55, 56 வயதாகும் போது ஓய்வூதியக் காலத்தில் கையில் காசின்றி தவிக்கப் போகிறார்கள் என்று எச்சரித்தார். மேலும், பி.எப் பிடி த்தத்திற்கான 15,000 ரூபாய் சம்பள உச்சவரம்பை இஎஸ்ஐ போல உயர்த்தக் கோரி சி.பி.டி கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தியும், நிர்வாகங்களின் கூடுதல் பங்களிப்பை தவிர்க்கவே அரசு இந்த வரம்பை உயர்த்த மறுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு தொழி லாளர்களைப் பற்றிய கவலையோ, புரிதலோ இல்லை. அவர்கள் அதி காரிகள் பேச்சைக் கேட்டு செயல்படுகிறார்கள். தொழி லாளர்களுக்கு சாதகமான எந்த ஒரு காரியத்தையும் இந்த அரசு தானாக செய்யாது. எனவே, இந்த கொடூரக் கரங்களில் இருந்து விடிவு பெற வேண்டு மெனில், தற்போது வேலை யில் இருக்கும் தொழி லாளர்களும், ஓய்வு பெற்ற பென்ஷன்தாரர்களும் தங்களின் குடும்பத்தோடு மத்திய தொழிற்சங்கங்களு டன் இணைந்து, அரசின் கொள்கைகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். பங்கேற்ற தலைவர்கள் இதில் சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன், சென்னை பென்சனர் சங்க செயலாளர் க.ராமையன், துணைச் செயலாளர் எஸ்.உமாகாந்தன், துணை தலைவர் எம்.பானுமூர்த்தி, ஏ.ஆர்.துரைசாமி (கோவை பென்சனர் சங்கம்), டி.குணசேகரன் (புதுச்சேரி பென்சனர் சங்கம்), சி.ஆர்.பிரபாகரன் (தலைவர், கார்போரண்டம் யுனிவர்சல் தொழிற்சங்கம்), அசோக் லேலண்ட் பவுண்ட்ரி டிவிஷன் பொதுச்செய லாளர் எஸ்.அருண்குமார், இணைச் செயலாளர் கி.சுரேஷ் பால்மர் லாறி பொதுச்செயலாளர் எம்.கருணாநிதி, ராயல் என்பீல்டு சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜி.குமாரசாமி ஆகியோரும் பேசினர். ஓசூர் பென்சனர் சங்க பொருளாளர் எஸ்.தேன்சாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.