முந்தய பக்கம்

சீனா செல்கிறார் அஜித் தோவல்

yesterday
சீனா செல்கிறார் அஜித் தோவல்

சீனா செல்கிறார் அஜித் தோவல்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந் தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தொடர்பான இருநாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காகத் திங்களன்று சீனா செல்லவுள்ளார். சீனத் தரப்புப் பிரதிநிதியான வாங் யீயுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா - சீனா இடையேயான 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பிரச்சனையை விரிவாகத் தீர்ப்பதற்காக, கடந்த 2003ஆம் ஆண்டு இந்தச் சிறப்புப் பிரதிநிதி பேச்சுவார்த்தை முறை ஏற்படுத்தப்பட்டது. இதன் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருவரும் (அஜித் தோவல் - வாங் யீ) செயல்பட்டு வருகின்றனர். அதன்படி அஜித் தோவலும் வாங் யீயும் செவ்வாயன்று 25ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதி பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

தில்லியில் செப்டம்பர் 12-13 தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித் தோவல் - வாங் யீ இடையேயான பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram