தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கவரைப்பேட்டையில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து இளைஞர் பெருமன்றம் நூதன ஆர்ப்பாட்டம்

21 Jun 2026, 1:35 am
விலை உயர்வை ரத்து செய்யக்கோரி  கவரைப்பேட்டையில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து இளைஞர் பெருமன்றம் நூதன ஆர்ப்பாட்டம்
<p><strong>விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கவரைப்பேட்டையில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து இளைஞர் பெருமன்றம் நூதன ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​திருவள்ளூர், ஜூன் 20- பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கவரைப்பேட்டையில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட செயலாளர் கே.மோகன்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் க.பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெற்றுக்கொண்டு முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதாகவும், மக்களிடம் நிதி வசூலிக்கும் இடதுசாரிகளால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியைத் தர முடியும் என்பதால் இளைஞர்கள் இடதுசாரி அரசியலின் பின்னால் அணிதிரள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பி.வி.செந்தில், மாவட்ட அமைப்பாளர் வி.இ.ராஜுவ்காந்தி, மாவட்ட நிர்வாகிகள் எம்.ரவிச்சந்திரன், ஹாகின்ஷா, சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.