விதொச பொங்கலூர் ஒன்றிய மாநாடு
6 Jul 2026, 10:18 pm
<p><strong>விதொச பொங்கலூர் ஒன்றிய மாநாடு</strong></p><p>திருப்பூர், ஜூலை 6 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றிய 8 ஆவது மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பி னர் டி.செல்வம் தலைமை யில் நடைபெற்ற மாநாட்டை துவக்கிவைத்து, மாவட்டத்தலைவர் ஏ.சண்முகம் உரையாற்றினார். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜி.சுந்தரம் அறிக்கை முன்வைத்தார். சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் ஜி. சம்பத், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் நிஷா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். மாநாட்டில், ஒன்றியத் தலைவராக ஆர்.பாலன், செயலாளராக ஜி.சுந்தரம், பொரு ளாளராக டி.செல்வம் உள்ளிட்ட 5 நிர்வாகி கள் உட்பட 13 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இதில், எல்லப்பாளையம் ஊராட்சி நிழலி கிராமத்தில், பட்டா பெற்று பல்லாண்டு காலம் ஏழை மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்ற னர். இம்மக்களை வருவாய்த்துறை அதிகாரி கள் வெளியேற்றும் முயற்சி மேற்கொள் கின்றனர். இதனை கைவிடக் கோரியும், தொடர்ந்து அத்துமீறி வீடுகளைப் பிரித்து வெளியேற்ற சொல்லும் வருவாய்த் துறையை கண்டித்தும், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவது. பொங்கலூரில் உள்ள காவல் நிலையம் திறப்பு விழா முடிந்து 6 மாதங்கள் கடந்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. ஆகவே பொதுமக்களின் சிரமங்களை போக்கிட உடனடியாக காவல் நிலையத்தை திறந்து செயல் பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து மாவட்டச் செய லாளர் ஆ.பஞ்சலிங்கம் உரையாற்றினார். முடிவில், ஒன்றியக்குழு உறுப்பினர் பழனி யம்மாள் நன்றி கூறினார்.</p>
