தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்! ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்

27 Sept 2026, 10:28 pm
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு  தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்! ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்
<p><strong>பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்! ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>பெரம்பலூர், செப். 27- பெரம்பலூரில் ஏஐடியுசி தொழிற்்சங்கத்தின் 2 ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன்முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் தில்லைவனம் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்தார். மாநிலச் செயலாளர் சந்திரக்குமார் உட்பட பலர் பேசினர். ஏஐடியுசிதேசிய துணை தலைவரும், திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன் உரையாற்றினார். மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. </p><p>தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி தலைவராக ஞானசேகரன், மாவட்ட துணைத்தலைவர்களாக அய்யாக்்கண்ணு, பிரபாகரன், செல்லதுரை, பொதுச்செயலாளராக சண்முகம், துணைச் செயலாளர்களாகராஜாங்கம்,மகாலட்சுமி, கண்ணன் , பொருளாளராக மல்லீஸ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜாங்கம் வரவேற்றார். கட்டட சங்க மாவட்டபொருளாளர் நித்யா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.