கேரள அரசு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் உத்தரவுகளுக்கு வெளிப்படையாகப் பணிகிறது இந்திய மாணவர் சங்க இணைச் செயலாளர் ஐஷி கோஷ் கண்டனம்
20 Aug 2026, 9:28 pm

கேரள அரசு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் உத்தரவுகளுக்கு வெளிப்படையாகப் பணிகிறது இந்திய மாணவர் சங்க இணைச் செயலாளர் ஐஷி கோஷ் கண்டனம்

புதுதில்லிகேரள அரசு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் உத்தரவுகளுக்கு வெளிப்படையாகப் பணிகிறது என இந்திய மாணவர் சங்க இணைச் செயலாளர் ஐஷி கோஷ் கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேசாபிமானி செய்தியாளரிடம் அவர் அளித்தபேட்டியில்,”காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் உத்தரவுகளுக்கு வெளிப்படையாகப் பணிகிறது.

ஜந்தர் மந்தர்போராட்டத்திற்குப் பிறகு தில்லியில் காவல்துறையினர் எங்களைத் தேடி வந்தனர். அதே நிலைதான் கேரளத்திலும் தற்போது நடக்கிறது. நாங்கள்கேரளத்தில் இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் போராட்டம் மற்றும் ஜனநாயக பாதுகாப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ககட்டுப்பாடுகள் கேரளத்தில் தற்போது உள்ளன. இது அவமானகரமானது. கேரள அரசுக்கு தில்லிதான் (மோடி அரசு) முன்மாதிரியாக ஆகிவிட்டதா? என்பதை நான்தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆனால் நாடு முழுவதும் சங் பரிவாரின் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மாணவர்களுக்கு கேரளம் தொடர்ந்து நம்பிக்கையளிக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்திய மாணவர்சங்க (எஸ்எப்ஐ) அமைப்பு ஆர்எஸ்எஸ் உடனோ அல்லது அதன்வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் கொள்கைகளுடனோ எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது. ஜந்தர் மந்தர் போராட்டம், அரசுக்கு எதிராக அச்சமின்றி குரல்கொடுப்பதற்கான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. கல்வி காவிமயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராட கரப்பான்பூச்சி ஜனதாகட்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் எஸ்எப்ஐ ஒருங்கிணைந்துசெயல்படும். அதே போல எஸ்எப்ஐ பள்ளிகள் மூடப்படுவதிலிருந்து பாதுகாக்க ‘பள்ளி பாதுகாப்போம்’ இயக்கத்தைத் தொடரும். “ என அவர்உறுதியளித்தார்.