உலகளாவிய இணைய இணைப்பில் ஏர்டெல்
14 Feb 2026, 4:00 pm
<p><strong>உலகளாவிய இணைய இணைப்பில் ஏர்டெல்</strong></p>
<p>இந்திய நெட்வொர்க்குகளை உலக ளாவிய இணையத்துடன் இணைக்கும் கடலடி கேபிள்க ளில் பாரதி ஏர்டெல் நிறுவனம் மிகப் பெரிய முதலீட்டா ளர்களில் ஒன்றாக உருவெடுத்துள் ளது. இதுதொடர்பாக ஏர்டெல் செய்தித் தொ டர்பாளர் கூறுகை யில்,“நாங்கள் இந்தியாவின் மிகப்பெரிய கடலடி கேபிள் போர்ட்போலியோவை இயக்கி வருகிறோம். 5 கண்டங்களில் உள்ள 50 நாடுகளில் 4,00,000 வழித்தட கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரத்திற்கு எங்களது நெட்வொர்க் பரவி யுள்ளது. i2i, EIG, IMEWE மற்றும் SEA-ME-WE-4 போன்ற 34க்கும் மேற்பட்ட முக்கி யமான கேபிள் அமைப்புகளில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். இது எங்களை உலகளவில் மிக விரிவான இணையத் தொடர்பு கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது” என அவர் கூறினார்.</p>
