முந்தய பக்கம்

தில்லியில் மேலும் மோசமாகும் காற்றின் தரம்

20 Nov 2025, 3:46 pm
தில்லியில் மேலும் மோசமாகும் காற்றின் தரம்
<p><strong>தில்லியில் மேலும் மோசமாகும் காற்றின் தரம்</strong></p> <p>நாட்டின் தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து ஏழா வது நாளாக வியாழக்கிழமை யும் &ldquo;மிகவும் மோசமான (Very Poor)&rdquo; பிரிவிலேயே நீடித்தது. வியாழனன்று தில்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 398 ஆகப் பதி வாகியுள்ளது. மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் (CPCB) &ldquo;சமீர்&rdquo; செயலி மூலம் கிடைத்த தரவுகளின்படி, தில்லியில் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில் 21 நிலையங்களில் காற்றின் தரம் &ldquo;தீவிரமான (Severe)&rdquo; பிரிவில் (AQI 400-க்கு மேல்) பதிவா கியுள்ளது. தில்லி தொழில்நுட்பப் பல்கலைக் பழகம், புராடி, சாந்தினி சௌக், ஆனந்த் விஹார், முண்ட்கா, ஓக்லா, பவானா, வசீர்பூர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400-க்கும் அதிகமாகப் பதிவானது. இந்தத் தொடர்ச்சியான மோச மான காற்றுத் தரம் காரணமாக, தில்லி வாசிகள் சுவாசம் சார்ந்த தீவிர சுகாதா ரப் பிரச்சனைகளை எதிர்கொண்டு மருத்துவமனைக்கு சென்று வரு கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram