வன ஆய்வுகளுக்கு உதவும் காற்று மாசு வடிகட்டிகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
13 Jun 2026, 7:51 pm

வன ஆய்வுகளுக்கு உதவும் காற்று மாசு வடிகட்டிகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

காற்று மாசை கண்டறிய உதவும் வடிகட்டிகள் வன உயிரினங்களை கண்டுபிடிக்கவும் பயன்படுகின்றன. யுகேயில் இந்த புதிய முறையைப் பயன்படுத்தி ஆய்வாளர் கள் வன உயிரின ஆய்வை நடத்தினர். இதில் கேட் கீப்பர் வண்ணத்துப்பூச்சி (gatekeeper butterfly) உட்பட 65 வகையான வண்ணத்துப்பூச்சி, அந்துப் பூச்சி இனங்களை கண்டறிந்தனர்.

சூழல் டி என் ஏ

ஆண்டுதோறும் யுகேயில் நடை பெறும் வண்ணத்துப்பூச்சிகள் கணக் கெடுப்பில் 2025-இல் மக்கள் தாங்கள் காணும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு விஞ் ஞானிகள் விடுத்த கோரிக்கைக்கு நூறா யிரத்திற்கும் கூடுதலான பதில்கள் கிடைத்தன. முற்றிலும் வித்தியாசமான இந்த புதிய அணுகுமுறையைப் பயன் படுத்தி பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு முதல் தேசிய உயிர்ப் பன்மயத்தன்மை குறித்த முழு ஆய்வறிக்கையைத் தயாரித்தது.

கண்களால் பார்த்து விஞ்ஞானிகள் கணக்கெடுப்பு நடத்துவதற்கு பதில் யுகேயில் எல்லா இடங்களில் இருந் தும் காற்றின் தரம் பற்றி மாதிரியாளர் கள் எப்போதும் காற்றில் கலந்திருக் கும் உலோகத் துகள்களை கண்டறிய உதவும் விவரங்களை அனுப்பினர். இதனுடன் நுண்ணிய டி என் ஏ பற்றிய தகவல்களும் கிடைத்தன. இவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். “உயிரி னங்கள் எப்போதும் தங்கள் உடலின் நுண்ணிய பகுதிகளை இழக்கின்றன.

இறந்த உடல்செள்கள், முடி அல்லது இறகுகளின் சிறு துண்டுகள், உமிழ்நீர், மலம், சிறுநீர் ஆகியவை இவற்றில் அடங்கும். இவற்றில் சில காற்றில் பரவி சூழல் டி என் ஏவாக (environmental’ DNA or eDNA) மாறு கின்றன” என்று ஆய்வுக் குழுவின் அங்க மும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி விஞ்ஞானியுமான டாக்டர் ஜோஆன் லிட்டில் ஃபேர் (Dr Joanne Littlefair) கூறுகிறார்.

யுகேயில் நன்கு பரிச்சயமான உயிரி னங்கள், மரங்கள், வணிகப் பயிர்கள், மண் புழுக்கள் உள்ளிட்டவை கண்டு பிடிக்கப்பட்டன.

மேலும் நியூட்ஸ் (Newts) என்ற ஒரு வகை இருவாழ்வி உயிரினங்கள், ராபின் பறவைகள், வலை தோண்டி அதனுள் வாழும் கரடிகள் உட்பட 1,100 தாவரங்கள், விலங்குகளை விஞ்ஞா னிகள் கண்டுபிடித்தனர்.

இந்த பட்டியலில் சூழல் முக்கியத் துவம் மிகுந்த வானம்பாடிகள், முள் எலிகள் அடங்கும். இந்த முறையில் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பில் மூன்றாவது இடம் பிடித்த கேட் கீப்பர் வண்ணத்துப்பூச்சி, பர்ப்பிள் முடி ஸ்ட்ரீக் (purple hairstreak) என்ற ஓக் மரங்களில் மட்டுமே வாழும் வண்ணத் துப்பூச்சி இனங்கள் உட்பட 65 வண்ணத் துப்பூச்சி மற்றும் அந்துப் பூச்சி இனங் கள் மற்றும் நன்கு நிலைபெற்று வாழும் சாம்பல் நிற அணில்கள், குரைக்கும் மான்கள் போன்ற ஆகிர மிப்பு உயிரினங்களும் கண்டறியப் பட்டன.

கண்டறியப்பட்டவற்றில் பயிர் களை அழிக்கும் களையாக கருதப் படும் ஒரு பூஞ்சை வகை, சாம்பல் மரங் களில் ஆஷ் டைபேக் (ash dieback) என்ற நோய்க்கிருமியும் உள்ளது. யுகே தேசிய கணக்கெடுப்பு ஒரு தற்செய லான சமூக ஊடக செய்தியின் மூலம் தொடங்கியது. “சூழல் டிஎன்ஏ திட்டத் தை பற்றிய ஒரு செய்தியை கேம் பிரிட்ஜ்ஷயரில் (Cambridgeshire) உள்ள ஒரு விலங்கு காட்சிச் சாலை யின் சமூக ஊடகத்தில் பார்த்தோம்

உயிர்ப் பன்மயத் தன்மை தகவல் கள் தரும் காற்று மாசு வடிகட்டிகள்

எங்களது ஆய்வகத்தில் உள்ள வடிகட்டிகளிலும் உள்ளூர் உயிர்ப் பன் மயத் தன்மை பற்றிய விவரங்கள் உள்ள னவா என்ற வியப்பு ஏற்பட்டது” என்று தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் (National Physical Laboratory) விஞ்ஞானி டாக்டர் ஆண்டியூ பிரவுன் (Dr Andew Brown) கூறுகிறார். காற் றின் தரம் குறித்து மாதிரிகளை அனுப்பு பவர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்தன.

இவை லண்டன் மேரிலிபோன் சாலை (Marylebone Road), கிராமப்புற ஹாம்ஷயர் (Hampshire), ஸ்காட் லாந்தில் உள்ள பீட் ஃபாக் (peat bog) போன்ற யுகேயின் வெவ்வேறு இடங் களில் இருந்து வந்தன. சில கண்டுபிடிப் புகள் சூழல் மண்டலத்தின் பகுதியாக நடைபெறவில்லை. ஆனால் இத்தக வல்கள் சூழல் டி என் ஏக்கள் எவ்வளவு தூரம் பயணிக்கின்றன என்பதை தெரி வித்தன. கொடுவா மீன் மற்றும் ஹேக் என்ற காட் இனத்தைச் சேர்ந்த மீன் வகை உள்ளிட்ட உண்பதற்கு தகுதியான மீன்கள் மேரைன்போவில் கண்டு பிடிக்கப்பட்டன.

இதன் மூலம் ஒவ்வொரு காற்று மாசு வடிகட்டியும் அதைச் சுற்றி 19 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள உயிரினங் கள் பற்றிய தகவல்களைத் தருகிறது என்று தெரியவந்தது. “இது ஆரம்பம் மட்டுமே. இம்முறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விவரங்களை சேகரிக்கமுடியும். வேறெந்த முறை யிலும் இந்த அளவு மிகப்பெரிய நிலவி யல் பரப்பில் உள்ள உயிரினங்கள் பற்றிய தகவல்கள் கிடைப்பதில்லை” என்று ஆய்வின் ஒரு அங்கமாக இருந்த யார்க் (York) பல்கலைக்கழக பேரா சிரியர் எலிசபெத் கிளேர் (Prof Elizabeth Clare) கூறுகிறார்.

இம்முறையில் கண்டுபிடிக்கப்பட்ட வற்றில் மூன்றில் ஒரு பகுதி இரவு உயிரி னங்கள். இவற்றை சுலபமாக காண முடியாது. இவை குறித்த கணிப்புகள் குறைவாக மதிப்பிடப்படுகின்றன. ஆய்வில் ப்ளூ டிட்ஸ் (blue tits), சிவப்பு வல்லூறு போன்ற ஒரு சில உயிரினங்கள் தவறவிடப்பட்டன என்றா லும் உயிர்ப் பன்மயத் தன்மையில் ஏற்ப டும் மாற்றங்கள் பற்றி ஆராயப்படாத இடங்களில் இம்முறை பயனுள்ளது. உலகளவில் காற்றின் தரம் குறித்த தரவுகள் வழக்கமாக மேற்கொள்ளப் படுவதால் இம்முறை வன உயிரினங் கள் குறித்த ஆய்விற்கு மிக சிறந்த முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின் றனர்.