தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

13 May 2026, 9:05 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

விமான சேவைகளைக் குறைத்தது ஏர் இந்தியா

எரிபொருள் விலை உயர்வு, வான் வெளி கட்டுப்பாடுகள் காரண மாக, தில்லி-சிகாகோ உள்ளிட்ட 6 சர்வதேச வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைப்பதாக ஏர் இந் தியா நிறுவனம் புதனன்று அறிவித்தது. இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளி யிட்டுள்ள அறிக்கையில், “எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமான நிறு வனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஏற்கெனவே சில வழித்தடங்களில் விமா னங்களைக் குறைத்துள்ளோம். மேலும் தில்லி - சிகாகோ, மும்பை - நியூயார்க், தில்லி - ஷாங்காய், சென்னை - சிங்கப் பூர், மும்பை - டாக்கா, தில்லி - மாலே என 6 வழித்தடங்களில் விதிக்கப்பட் டுள்ள தடை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை யிலான காலக்கட்டத்தில் அமலில் இருக்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது. புதுதில்லி

‘நாட்டில் எரிபொருள் விலை உயர்வை தவிர்க்க முடியாது’

பிரதமர் மோடி மே 11ஆம் தேதி முதல் 7 கோரிக்கைகளை கடை பிடியுங்கள் என கொரோனா காலத் தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை போன்று சிலவற்றைக் கூறி கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தாறு மாறாக உயரும் என செய்திகள் வெளி யாகி வருகிறது. இத்தகைய சூழலில், எரிபொருள் விலை உயர்வை தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கியும் வெளிப் படையாக அறிவித்துள்ளது நாட்டு மக்க ளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளு நர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், “உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியா வில் இந்த விலை உயர்வினால் ஏற்படும் கூடுதல் சுமையை அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தாங்கிக்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த சூழல் நீண்ட காலத்திற்கு நீடிக்குமே யானால், விலை உயர்வினால் ஏற்படும் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கம் தவிர்க்க முடியாமல் வேறுவழியின்றி நுகர்வோர் மீது சுமத்த வேண்டியிருக்கும். அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையானது பணவீக்கம், எரிபொருள் இறக்குமதி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அழுத் தத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், சில்லறை எரிபொருள் விலைகளை மாற்றாம லேயே வைத்திருக்க அரசால் முடியா மல் போகலாம்” என அவர் பீதியை கிளப்பி யுள்ளார். ஹைதராபாத்

போக்சோ வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஒன்றிய பாஜக அமைச்சர் மகன்

பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குமாரின் மகன், பண்டி சாய் பகீரத் சிறுமியை பாலியல் ரீதியாக துன் புறுத்தியதாக அவர் மீது போக்சோ பிரி வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு பெட் பஷீராபாத் காவல் நிலையத்தில் புதன்கிழமை மதியம் 2 மணிக்குள் ஆஜ ராகுமாறு பண்டி சாய் பகீரத்திற்கு காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்த னர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் பெட் பஷீராபாத் காவல் நிலை யத்திற்கு வெளியே ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.