முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

11 Mar 2026, 3:52 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

கட்டணங்களை உயர்த்தியது ஏர் இந்தியா

சர்வதேசச் சந்தையில் விமான எரி பொருள் விலை உயர்ந்து வந்ததை தொடர்ந்து, ஏர் இந்தியா தனது விமான கட்டணங்களை உயர்த்தி யுள்ளது. மார்ச் 12 முதல் அமலுக்கு வரும் இந்த கட்டண உயர்வு 3 கட்டங்களாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்

எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை உருவாகி வருவதால் கிட்டத் தட்ட ஒரு கோடி பேர் வேலை யிழக்கும் அபாயம் உருவாகி வருவதா கத் தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.  பனிப்போர் காலங்களில் கூட இந்தியா அணிசேரா வெளியுறவுக் கொள் கையைப் பின்பற்றி வந்தது. இந்த 75 ஆண்டுக்கால அணிசேரா கொள்கை யைத் தகர்த்ததன் மூலம் பிரதமர் மோடி  தவறு செய்துவிட்டார். ஈரானை எதிரி யாக்கிவிட்டார் எனவும் விமர்சித் துள்ளார்.

சபாநாயகரின் கைகள் கட்டப்பட்டுள்ளன  கே.சி. வேணுகோபால் கடும் தாக்கு

சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியி லிருந்து நீக்க வலியுறுத்தும் தீர்மா னத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், பிர தமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சபாநாயகரின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது என குற்றம் சாட்டினார். ரஷ்யாவிடமிருந்து 30 நாட்களுக்கு மட்டும் எண்ணெய் வாங்கலாம் என்று  இந்தியாவுக்குக் கட்டளையிட அமெரிக் கா யார்? அமெரிக்கா இந்தியாவை மிரட்டு கிறது, ஆனால் இந்த அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி அரசு அமெரிக்காவிடம் முழுமையாகச் சரண டைந்துவிட்டது என்றும் கடுமை யாக விமர்சித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram