தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

180 பயணிகளுடன் நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம் விமானியின் சாதுர்யத்தால் கண்ணூர் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கம்

16 Jun 2026, 8:55 pm
180 பயணிகளுடன் நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம் விமானியின் சாதுர்யத்தால் கண்ணூர் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கம்

180 பயணிகளுடன் நூலிழையில் தப்பிய ஏர் இந்தியா விமானம் விமானியின் சாதுர்யத்தால் கண்ணூர் விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கம்

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நக ருக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 180 பயணிகளுடன் கண்ணூர் விமான நிலை யத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகத் தரை யிறக்கப்பட்டனர்.

என்ன நடந்தது?

கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திலி ருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நோக்கி செவ்வாயன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமா னம் வழக்கம்போல் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் இன்ஜின் பகுதியில் ஏதோ கோளாறு இருப்பதை விமானி உடனடியாக கவனித்தார். இதுகுறித்து கண்ணூர் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசரத் தரையிறக்கத்திற்கான அனுமதி கோரப்பட்டதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் அங்கு அனைத்துப் பாதுகாப்பு, மருத்துவ உதவிகளைத் தயார் நிலையில் வைத்தனர்.

இதையடுத்து, சாமர்த்தியமாகச் செயல்பட்ட விமானி, விமானத்தைக் கண்ணூர் விமான நிலையத்தை நோக்கியே திருப்பி, அங்கு பத்திர மாக அவசரமாகத் தரையிறக்கினார். விமானத்தில் இருந்த 180-க்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர் கள் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக மீட்டெ டுக்கப்பட்டனர்.இதனால் பயணிகள், அவர்களது உறவினர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

கோளாறுக்கான காரணம்

விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். விமானத்தின் என்ஜினுக்குச் செல்லும் எரிபொருளை வடிகட்டும் அமைப்பான ‘பியூயல் பில்டரில்’ (Fuel Filter) ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே என்ஜி னில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தத் திடீர் சம்பவத்தால் கண்ணூர் விமான நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது. பாதிக்கப்பட்ட பயணிகளை ஜெட்டாவுக்கு அனுப்ப ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மாற்று விமானத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக (செவ்வாயன்று மாலை நிலவரப்படி) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.