ஏர் ஹாரன்கள் பறிமுதல் தனியார் பேருந்துகளுக்கு அபராதம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>ஏர் ஹாரன்கள் பறிமுதல் தனியார் பேருந்துகளுக்கு அபராதம்</strong></p>
<p>மேட்டுப்பாளையம், டிச.10- மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் போக்கு வரத்து விதிகளுக்கு மாறாக அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 தனியார் பேருந்துக ளுக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் புதனன்று தனியார் மற்றும் அரசு பேருந்து களில் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலை மையிலான குழுவினர் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டி ருக்கிறதா? என ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தியிருந்த 5 தனி யார் பேருந்துகளில் இருந்து அவற்றை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்தனர். மேலும் தனியார் பேருந்து உரிமை யாளர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். அடுத்த முறை மீண்டும் இதே போன்ற அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப் பட்டது தெரிய வந்தால், சட்டரீதியான வழக்கு தொடுக் கப்படும் என ஓட்டுநர்களுக்கு வட்டார போக்குவரத்து அலு வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
