தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விமானப்படை பராமரிப்புப்பிரிவு தலைவர் ஆவடி விமானப்படை நிலையம் வருகை

9 Nov 2025, 4:12 pm
விமானப்படை பராமரிப்புப்பிரிவு தலைவர்  ஆவடி விமானப்படை நிலையம் வருகை
<p><strong>விமானப்படை பராமரிப்புப்பிரிவு தலைவர்&nbsp;&nbsp;ஆவடி விமானப்படை நிலையம் வருகை&nbsp;</strong></p> <p>சென்னை, நவ,9- இந்திய விமானப்படையின் பராமரிப்பு ஆணையக தளபதியும் மூத்த அதிகாரியு மான ஏர் மார்ஷல் விஜய் குமார் கார்க், &nbsp;சனிக்கிழமை (நவ,8) &nbsp;சென்னை ஆவடி விமானப்படை நிலையத்தின் செயல்பாடு களையும் அதன் &nbsp;தயார்நிலை குறித்தும் &nbsp;ஆய்வு செய்தார். ஆவடி விமானப்படை நிலையத்தின் பல்வேறு பணிகள் &nbsp;குறித்து ஏர் மார்ஷல் கார்க் கேட்டறிந்தார். அவர் அதன் பல்வேறு பிரிவு களைப் பார்வையிட்டார். விமானப்படை &nbsp;நிலையத்தின் தயார்நிலையை அவர் ஆய்வு செய்தார். அவர் நிலைய அலுவலர்களுடன் &nbsp;கலந்துரையாடினார். தங்குதடையற்ற தள வாடங்கள் விநியோகம், பராமரிப்பு நடை முறைகள் போன்றவற்றின் &nbsp;அவசியத்தை வலியுறுத்தினார். விமானப்படை நிலையத் தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். அவருடன், அவரது மனைவியும், விமானப்படை குடும்ப நல சங்கத்தின் பிராந்திய தலைவருமான ரிது கார்க், விமா னப்படை குடும்ப நல சங்க உள்ளூர் பிரிவால் நடத்தப்படும் பல்வேறு நல வாழ்வு நட வடிக்கைகள் குறித்து விசாரித்தார். அவர் அதன் உள்ளூர் உறுப்பினர்களுடன் உற்சாக மாக உரையாடி, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப &nbsp;அவர்கள் தங்களை சமூக ஊடகங்கள் போன்றவற்றில் புலமை பெறவேண்டு மென்று வலியுறுத்தினார். அவர்களது குடும்ப மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், கல்வி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றில் புதிய முன்னேற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஊக்குவித்தார். முன்னதாக, இவரையும் ஆவடி விமா னப்படை நிலையத்தின் தலைவர் ஏர் கமடோர் பிரதீப் சர்மா மற்றும் விமானப்படை குடும்ப நல சங்கத்தின் (உள்ளூர்) தலைவர் குரூப் கேப்டன் ரச்னா சர்மா (ஓய்வு) ஆகி யோர் வரவேற்றனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.