ஐந்திலை கரைசல் செய்முறை விளக்கம்
3 Jan 2026, 4:57 pm
<p><strong>ஐந்திலை கரைசல் செய்முறை விளக்கம்</strong></p>
<p>மயிலாடுதுறை, டிச.3- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள விளநகர் அய்யனார் கோவிலில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்களால் ஐந்திலை கரைசல் தயாரித்தல் குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவர் நௌஃபல் அஸ்லாம், ஐந்திலைகளான வேம்பு, எருக்கம், ஆடாதோடா, புங்கம் கொண்டு கரைசல் தயாரித்தல் குறித்து செயல் முறை விளக்கமளித்தார். மாணவர் நாவலரசு ஐந்திலை கரைசலின் பயன்கள் மற்றும் வேளாண் துறையில் இயற்கை வழிப்பூச்சி கட்டுப்படுத்தலின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு விளக்கினார். மாணவர் விஸ்வஜித் முடிவுரை வழங்கினார். அப்பகுதி விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.</p>
