தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விசா அகில இந்திய மாநாடு - பிர்சா முண்டா பிறந்தநாள் கொடியேற்று விழா

32 minutes before
விசா அகில இந்திய மாநாடு - பிர்சா முண்டா பிறந்தநாள் கொடியேற்று விழா
<p><strong>விசா அகில இந்திய மாநாடு - பிர்சா முண்டா பிறந்தநாள் கொடியேற்று விழா</strong></p><p>உடுமலை, நவ.15 –அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 36 ஆவது அகில இந்திய மாநாடு தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவில் நவம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறுவதையொட்டியும், ஆதிவாசி மக்களின் உரிமைப் போராட்டத்தின் வீரநாயகன் பிர்சா முண்டாவின் 151 ஆவது பிறந்தநாளையொட்டியும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில்கொடியேற்று விழா நடைபெற்றது.</p><p>உடுமலை ஒன்றியக் குழு சார்பில் கொடுங்கியம் கிளையில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு ஒன்றியப் பொருளாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் கொடியை ரத்தினசாமி ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் அருண் பிரகாஷ், துணைச் செயலாளர் தமிழ் தென்றல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், உடுமலை நகரக் குழு சார்பில் விவசாயிகள் சங்க நகர அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று குடிமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் ராமச்சந்திராபுரத்தில் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் தலைவர் ரவி செங்கொடியேற்றினார். இதில், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கனகராஜ் சிறப்புரையாற்றினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.