தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பீகார் மாநில மாநாடு

14 Jun 2026, 9:32 pm
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பீகார் மாநில மாநாடு

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பீகார் மாநில மாநாடு

அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் (ஏஐ கேஎஸ்) 38ஆவது பீகார் மாநில மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் மோதிஹாரி நகரில் ஜூன் 6 முதல் 8 வரை எழுச்சியுடன் நடைபெற்றது.

மகாத்மா காந்தி 1917-இல் நடத்திய நீலச் சாய (அவுரி) விவசாயிகளின் போராட் டக் களமான சம்பாரணில் நடை பெற்ற இம்மாநாட்டில், 30 மாவட் டங்களிலிருந்து 315 பிரதிநிதிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினரும் விவசாய சங்கத்தின் அகில இந்தி யத் துணைத்தலைவருமான அம்ரா ராம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

பாஜக தலைவர்களின் தூண்டு தலால் பொய் வழக்கில் கைது செய் யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ள விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ராஜ் மங்கல் பிரசாத்தின் கைதை இந்த மாநாடு வன்மையாகக் கண்டித் தது. மாநாட்டின் இடையே அகில இந்தியத் தலைவர்கள் அவரை மோதிஹாரி மத்திய சிறையில் நேரில் சந்தித்தனர்.

அகில இந்தி யத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே உள்ளிட்ட தலைவர்கள், ஒன்றிய - மாநில பாஜக அரசு களின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கடுமையாகச் சாடி, போராட்டங்களை தீவிரப் படுத்த அறைகூவல் விடுத்தனர்.

குறிப்பாக, மாநாட்டில் ‘ஒன்றி ணைந்த விவசாயிகள் போராட் டம் - தற்போதைய நிலையும் எதிர் கால திசையும்’ என்ற தலைப்பில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் வினோத் குமார் சமர்ப்பித்த வேலை அறிக்கை மீதான விவா தங்களுக்குப் பின், அது ஒருமன தாக நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் மாநாட்டின் நிறைவு நாளில் 85 பேர்களைக் கொண்ட புதிய மாநி லக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய தலைவராக அஜய் குமார் (எம்எல்ஏ), பொதுச்செயலாளராக வினோத் குமார் (மீண்டும் தேர்வு), பொருளாளராக மனோஜ் சந்திர வன்ஷி ஆகியோர் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

வரும் ஆகஸ்ட் 10 அன்று பீகா ரின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ள பிரம்மாண்ட ‘ஜெயில் பரோ’ (சிறை நிரப்பும்) போராட்டத்தை மிகப்பெரிய அள வில் வெற்றிபெறச் செய்வது என்றும், உள்ளூர் அளவிலான விவ சாயப் போராட்டங்களை வலுப் படுத்துவது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.