பொதுக் காப்பீட்டுத்துறையில் ஏஐஐஇஏ-வின் மகத்தான பங்கு - ஜி.ஆனந்த்
30 Jun 2026, 9:31 pm

பொதுக் காப்பீட்டுத்துறையில் ஏஐஐஇஏ-வின் மகத்தான பங்கு - ஜி.ஆனந்த்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது பவள விழாக்காலத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், பொதுக் காப்பீட்டுத்துறையில் அதன் கொள்கை சார்ந்த போராட்டங்களையும், அசைக்க முடியாத பங்களிப்பையும் எண்ணிப் பார்ப்பது அவசியமாகும். இத்துறையில் ஒரு மிகச்சிறிய அமைப்பாகத் துவங்கி, இன்று ஓர் ஆற்றல்மிக்க அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க மாக ஏஐஐஇஏ பரிணமித்துள்ளது.

1971 இல் பொது இன்சூரன்ஸ் துறை தேசிய மயமாக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட சித்தாந்தப் பிரி வினைகளுக்கு மத்தியிலும், கிழக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ஊழியர்களின் ஒற்று மையைக் கட்டிக்காப்பது பெரும் சவாலாக இருந்தது. மாற்றுச் சங்கங்கள் போராட்டமற்ற நிலைப்பாட்டை எடுத்தபோது, ஒட்டுமொத்த ஊழியர் நலனுக்காக ஏஐஐஇஏ சமரசமற்ற போ ராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது.

உறுதியான போராட்டங்கள் தந்த பலன்கள்

நிர்வாகம் பிற அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்ந்து ஏஐஐஇஏ உறுப்பினர்கள் மீது பார பட்சமான நடவடிக்கைகளை எடுத்தபோதும், பேச்சுவார்த்தைக்கு மறுத்தபோதும் சங்கம் சட்டரீதியாகவும், கள ரீதியாகவும் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்தது. அதன் விளை வாகப் பெற்ற முக்கிய வெற்றிகள்:

Jஊதிய உயர்வுகளின் போது சரியான ஊதிய நிர்ணயம் சாத்தியமானது.

Jபகுதி நேர ஊழியர்களுக்கான சம்பள விகி தம், போனஸ் மற்றும் பிற பணப்பலன்கள் பெறப்பட்டன.

J“பணி நிரந்தர ஆய்வு” காலத்தின் போது பெண் ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த மகப்பேறு விடுப்புப் பலன் மீண்டும் வென் றெடுக்கப்பட்டது.

Jதற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் பணி வரன்முறைக்கான போராட்டங்கள் வலுப்பெற்றன.

போராட்ட இயக்கங்களின் மகுடம் (1987) 1985 களில் பொது இன்சூரன்ஸ் துறையில் சுமார் 5,000 பகுதிநேர, தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர் களின் பணி வரன்முறைக்காக ஏஐஐஇஏ தொடர் போராட்டங்களை நடத்தியது. 03.06.1987 அன்று யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகத்தின் முன் ஊழியர்கள் பெருவாரி யாகத் திரண்டனர். இப்போராட்டத்தை ஒடுக்க நினைத்த நிர்வாகம், முன்னணித் தோழர்க ளான ஆர். சந்தானம், ஜெ. குருமூர்த்தி, பி.வி. நந்தகுமார், எஸ். ராமச்சந்திரன் ஆகியோரைக் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய வைத்தது. மேலும், 11 தோழர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்; 23 பேர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் பாய்ந்தன.

இவ்வடக்குமுறைகளை எதிர்த்து ஓராண்டு காலம் நடந்த வீரியமிக்க போராட்டம் 11.05. 1988 அன்று மகத்தான வெற்றியில் முடிந்தது:

Jதற்காலிகப் பணிநீக்கம் மற்றும் துறைரீதி யான நடவடிக்கைகள் அனைத்தும் முழு மையாகத் திரும்பப் பெறப்பட்டன.

J5,000-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழி யர்கள் பணி வரன்முறைப்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையான எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் முழுப் பலன் களுடன் ஓய்வுபெற இப்போராட்டமே வழி வகுத்தது.

Jஇதேபோல், சென்னை யுனைடெட் இந்தியா தலைமை பயிற்றகத்தில் பணியாற்றிய 20 ஊழியர்களின் பணி வரன்முறையும் சாத்தியமாக்கப்பட்டது.

டிஎம்பி (TMP) திட்டம் முறியடிப்பு 2016 ஆகஸ்டில், தொழிற்சங்க நடவடிக்கை களை முடக்கவும் ஊழியர் ஒற்றுமையைக் குலைக்கவும் 4,000-க்கும் மேற்பட்ட ஊழி யர்களைக் கட்டாய இடமாற்றம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டது. இதில் பொதுக்காப்பீட்டுத் துறை நிலைக்குழுச் செயலாளரும் அடங்குவார். ஏஐஐஇஏ இத்திட்டத்திற்கு எதிராகத் தீவிர மான சட்டப் போராட்டங்களையும் கூட்டு இயக்கங்களையும் நடத்தியதால், வேறு வழியின்றி நிர்வாகம் தனது கட்டாய இடமாறு தல் (TMP) திட்டத்தைக் கைவிட்டது.

ஊதிய உயர்வு போராட்டம்

‘பொது காப்பீட்டு வணிகம் (தேசியமய மாக்கல்) சட்டம் 1972’ மூலம் 107 தனியார் நிறு வனங்கள் கையகப்படுத்தப்பட்டு, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (GIC) மற்றும் 4 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன. ஆரம்பத்தில் எல்.ஐ.சி-க்கு இணை யான ஊதிய முறையே இங்கும் அமலானது. ஆனால், 2017-2022 ஊதிய மாற்றத்தின் போது, நிறுவனத்தின் மற்றும் தனி நபர் செயல்பாட்டின் (Performance-linked) அடிப்படையிலேயே இனி ஊதியம் தீர்மானிக் கப்படும் என்ற பிரித்தாளும் சூழ்ச்சியை அரசு புகுத்தியது. கூட்டுச் செயல்பாட்டைச் சிதைக்கும் இத்திட்டத்தை ஏஐஐஇஏ கடுமையாக எதிர்த்தது. இதர சங்கங்களை ஒருங்கிணைத்து ஏஐஐஇஏ நடத்திய நீண்டகாலப் போராட்டத்தின் விளை வாக, இச்சதி முறியடிக்கப்பட்டு எல்.ஐ.சி-யில் உள்ள அதே சாதகமான நடைமுறைகளின் அடிப்படையில் 1.8.2022 முதல் அமலுக்கு வந்த புதிய ஊதிய மாற்றத்தை ஊழியர்கள் வெற்றிகரமாகப் பெற்றனர். சவாலான சூழல்களிலும் ஏஐஐஇஏ காட்டிய தத்துவத் தெளிவும், உத்திகளும், ஸ்தாபன உறுதியுமே பொதுக் காப்பீட்டு ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, எதிர்காலப் போ ராட்டங்களுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளன.