தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏஐஇஎஸ்எல் விமானப் பராமரிப்புத் தொழிலாளர்களின் மாபெரும் உள்ளிருப்புப் போராட்டம்

27 May 2026, 9:01 pm
ஏஐஇஎஸ்எல் விமானப் பராமரிப்புத் தொழிலாளர்களின் மாபெரும் உள்ளிருப்புப் போராட்டம்

ஏஐஇஎஸ்எல் விமானப் பராமரிப்புத் தொழிலாளர்களின் மாபெரும் உள்ளிருப்புப் போராட்டம்

“சம வேலைக்குச் சம ஊதியம்” கோரி நாடு தழுவிய அளவில் வெடித்த கிளர்ச்சி!

வேலைநிறுத்தம் 38

புதுதில்லி, மே 27 - பொதுத்துறை மற்றும் தனியார் உற்பத்தி ஆலைகளில் ஒப்பந்த உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக வட இந்தியாவில் பரவி வரும் தொழிலாளர் கொந்தளிப்பு, தற்போது நாட்டின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவன மான விமானப் போக்குவரத்துத் துறை யையும் உலுக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் (Air India Engineering Services Limited - AIESL) நிறுவன த்தின் ‘குறிப்பிட்ட கால வரம்பு’ ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதி ராகவும் நாடு தழுவிய அளவில் மாபெரும் உள்ளிருப்புப் போராட்ட த்தைத் தொடங்கியுள்ளனர்.

விமானப் போக்குவரத்துப் பாது காப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஏஐஇஎஸ்எல் நிறுவனம், தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, நாக்பூர் ஆகிய இந்தியாவின் முதன்மை விமான நிலையங்களில் உள்ள தனது பிரம்மாண்ட விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வளாகங்களின் வாயில்களில் தொழி லாளர்களின் தொடர் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. ஏர்பஸ் ஏ320 முதல் போயிங் 777 மற்றும் 787 ட்ரீம்லை னர் போன்ற அதிநவீன பயணியர் விமா னங்களின் அன்றாடப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத் தொழிலாளர்களே இந்த வர்க்கப் போராட்டத்தில் வீதிக்கு வந்துள்ளனர்.

அரசாணையை மதிக்காத கார்ப்பரேட் நிர்வாகம்

ஏஐஇஎஸ்எல் நிறுவனத்தில் தகுதிவாய்ந்த பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என 1,100-க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட கால வரம்பு ஊழி யர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலோர் 8 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்க ளின் உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக ஒத்த உழைப்பைச் செலுத்தினாலும், இந்த ஒப்பந்த ஊழி யர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர் களின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு கடந்த மே 8, 2026 அன்று வெளியிட்ட மாதிரி நிலையான உத்தரவு (Model Standing Orders) வரைவின்படி, ஒரே மாதிரியான பணி களைச் செய்யும் குறிப்பிட்ட கால வரம்புத் தொழிலாளர்களுக்கும் நிரந்த ரப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம், படிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனத் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த அரசு வழிகாட்டுதல்களை ஏஐஇ எஸ்எல் கார்ப்பரேட் நிர்வாகம் முற்றிலு மாகப் புறக்கணித்து உழைப்புச் சுரண்டலைத் தொடர்ந்து வருகிறது.

14 மணி நேர உழைப்பும் சொற்பக் கூலியும்

விமானப் பராமரிப்பு என்பது பய ணிகளின் உயிர்கள் சம்பந்தப்பட்ட மிக நுட்பமான, மன ஒருமுகப் பாடு தேவைப்படும் ஒரு பாதுகாப்பு பணியாகும். இத்தகைய சூழலில், இங்குள்ள பொறியாளர்களும் தொழில் நுட்ப வல்லுநர்களும் நாளொன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் வரை தொடர்ச்சியாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு பார்க்கப்படும் கூடுதல் நேரப் பணிக்கு, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் இரட்டை வீத ஊதியம் வழங்க வேண்டும் எனப் பணிக்கிறது. ஆனால், நிர்வாகமோ சட்ட விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, மணிக்கு வெறும் 85 ரூபாய் என்ற மிகச் சொற்பத் தொகையையே கூடுதல் நேர ஊதியமாக வழங்கித் தொழிலாளர் களை வஞ்சிக்கிறது.

பழிவாங்கலும் 2019 முதல் தொடரும் இழுபறியும்

இந்த ஊதிய முரண்பாடுகளுக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு மே 5 அன்று தொழி லாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய போது, கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என நிர்வாகம் அளித்த வாக்கு றுதியின் பேரில் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. எனினும், வாக்குறு திகள் காற்றில் பறக்கவிடப்பட்டதால், 2025 செப்டம்பர் 19 அன்று மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அப்போது தில்லி உயர் நீதி மன்றம், விமானப் பராமரிப்பு என்பது பொதுப் பயன்பாட்டுச் சேவை எனக் கூறி வேலைநிறுத்தத்திற்குத் தடை விதித்தது.

தற்போது மீண்டும் வெடித்துள்ள இப்போராட்டத்தில், தங்களின் நியாய மான உரிமைகளைப் பேசச் சென்ற தொழிலாளர் குழுவின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் 4 பேரை நிர்வாகம் அதி ரடியாகப் பணிநீக்கம் (Termination) செய்துள்ளது. மேலும், அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வேறு நிறு வனங்களுக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான தடையில்லாச் சான்றிதழ் கொள்கைகளையும் நிர்வாகம் திணித்துள்ளது.

சிஐடியுவின் வர்க்க ஆதரவும் கோரிக்கைகளும்

ஏஐஇஎஸ்எல் நிர்வாகத்தின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கைக் கடுமையாகக் கண்டித்துள்ள இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), போராடும் தொழிலாளர்களுக்குத் தனது முழுமையான வர்க்க ஆதர வைத் தெரிவித்துக் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பின் வரும் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன: • பழிவாங்கும் நோக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட 4 தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்; தொழிலாளர்கள் மீதான ஒடுக்கு முறைகளைக் கைவிட வேண்டும்.

• “சம வேலைக்குச் சம ஊதியம் மற்றும் சம சலுகைகள்” என்ற கொள்கையை குறிப்பிட்ட கால வரம்பு ஊழியர்கள் அனைவருக்கும் உடனடி யாக அமல்படுத்த வேண்டும்.

• நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களைப் பணி யின் நிரந்தரத் தன்மையைக் கருத்தில் கொண்டு உடனடியாக முறைப்படுத்தவேண்டும்.

• கூடுதல் நேரப் பணிகளுக்குச் சட்டப்படியான இரட்டை வீத ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும் மற்றும் விமானப் பாதுகாப்பை அச்சு றுத்தும் தன்னிச்சையான தடை யில்லாச் சான்றிதழ் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

விமானப் போக்குவரத்து போன்ற அதீதப் பாதுகாப்புத் தேவைப்படும் பொதுத்துறை நிறுவனங்களில், உழைப்புச் சுரண்டலை ஒழித்து முறை யான தொழிலாளர் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டியதன் அவசிய த்தை இப்போராட்டம் உணர்த்துகிறது. தொழிலாளர்களின் இந்த இருப்புப் போராட்டம் ஏழாவது நாளை எட்டியு ள்ள நிலையில், விமானச் சேவைகள் முடங்குவதைத் தடுக்க சிவில் விமா னப் போக்குவரத்து அமைச்சகம் உடன டியாகத் தலையிட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.