தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்கள், பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்து நிறுத்துக! சென்னை, மதுரை, திருப்பூரில் மாதர் சங்கம் பேரணி!

23 Jun 2026, 10:25 pm
பெண்கள், பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்து நிறுத்துக! சென்னை, மதுரை, திருப்பூரில் மாதர் சங்கம் பேரணி!

பெண்கள், பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்து நிறுத்துக! சென்னை, மதுரை, திருப்பூரில் மாதர் சங்கம் பேரணி!

பல்லாயிரக்கணக்கான பெண்கள் அணிவகுப்பு

மதுரை, ஜூன் 23 - தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் மண்டல அளவில் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. சென்னை, மதுரை, திருப்பூர் என தமிழ கத்தின் மூன்று முக்கிய நகரங்களில் நடை பெற்ற இந்த மண்டல அளவிலான பேரணி - பொதுக்கூட்டங்களில், பெண்கள் மீதான வன்மு றைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்தனர்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலி யல் அத்துமீறல்கள், குடும்ப வன்முறைகள், இணையவழி பாலியல் குற்றங்கள், கொலை கள் மற்றும் கொடூரத் தாக்குதல்கள் அச்ச மூட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க தவெக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு உடனடி நீதி, சட்ட உதவி மற்றும் மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான மாவட்ட கண்காணிப்பு குழுக்களை அமைத்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, மாதர் சங்கம் இந்தப் பேரணி - பொதுக்கூட்டங்களை நடத்தியது.

சென்னை வடதமிழக மாவட்டங்கள் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பேரணியில், மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி, மாநிலப் பொதுச் செயலாளர் அ. ராதிகா, துணைத்தலைவர் பி. சுகந்தி உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ். சரவணசெல்வி பேரணிக்குத்

தலைமை வகித்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம. சித்ரகலா உள்ளிட்ட மாநில - மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை மதுரையில், அரசரடி மின்வாரிய அலு வலகம் அருகில் இருந்து துவங்கிய பேரணியை, மாதர் சங்கத்தின் மூத்த தலைவர் ப்ரீத்தி துவக்கி வைத்தார்.

மாதர் சங்க மாநிலப் பொருளாளர் ஜி. ராணி, மத்தியக்குழு உறுப்பினர்கள் எஸ். வாலண்டினா, எஸ்.கே. பொன்னுத்தாய், ஆர். சசிகலா, எஸ். லட்சுமி, மாநில செயற் குழு உறுப்பினர்கள் என். உஷா பாசி, பி. சுசிலா, பி. கற்பகம், பி. பூமயில், ஆர். கலைச்செல்வி மற்றும் பெண்கள் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணி, ஏஏ ரோடு மற்றும் டிடி ரோடு வழியாக பெத்தானியாபுரம் அண்ணா வீதியை அடைந்தது.

அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் திருப்பூரில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட பேர ணியை, கல்வியாளர் மிருதுளா நடரா ஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த பேரணி, தென்னம்பாளை யம் பல்லடம் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத் தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பவித்ராதேவி தலைமை ஏற்றார்.

மாவட்டச் செயலாளர் எஸ்.பானுமதி வரவேற்றார். மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, மாநிலத் துணைத்தலைவர் கே. பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில நிர்வாகிகள் ஜே. உஷா, ஆர். மல்லிகா, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் செயலாளர்கள் ஏ.ஆர். ஆதரா (நீலகிரி), எம். ராதா (கிருஷ்ண கிரி), எஸ்.எம். தேவி (சேலம்), ஜெ. அருந்ததி (ஈரோடு), எஸ். ரஞ்சிதா (கரூர்), எம். செல்வராணி (நாமக்கல்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டப் பொரு ளாளர் ஆர். கவிதா நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.