தடுப்புகளை உடைத்து மேற்கு வங்க தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் நுழைந்த மாதர் சங்கத்தினர்
26 Sept 2026, 11:26 pm
<p><strong>தடுப்புகளை உடைத்து மேற்கு வங்க தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் நுழைந்த மாதர் சங்கத்தினர்</strong></p><p>தில்லியைப் போன்று பாஜக ஆளும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் தேர்தல் முறைகேடுகளைக்கண்டித்து வெள்ளியன்று மாலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட பேரணிநடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமிருந்து திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் கொல்கத்தாவிலுள்ள மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.</p><p>பேரணியின் போது, தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகவேண்டும். மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பெயர்கள் அனைத்தையும் உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும்.ஆகிய கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன. பல இடங்களில் தடுப்புகள் அமைத்து பெண்களைத் தடுத்தபோதிலும், மாதர்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுதலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை அடைந்து தங்களின் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தது.இப்போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கனினிகா கோஷ், மத்தியக் குழு உறுப்பினர் மீனாட்சிமுகர்ஜி, மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஜஹானாரா கான் மற்றும்மாநிலச் செயலாளர் மொனாலிசா சின்ஹா ஆகியோர் தலைமை தாங்கினர்.</p>
