முந்தய பக்கம்

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக

yesterday
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக
<p>மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏவை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இலக்கியபாரதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் மேரி கலந்து கொண்டு பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி செய்தி அனுப்பிய சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாக கைது வேண்டும். செஞ்சி அருகே காணமல் போய் 36 நாட்களாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத 7வயது சிறுமியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சித்ரா, மாவட்ட குழு உறுப்பினர் நீலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram