சமையல் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி
19 Jun 2026, 2:35 am
<p>சமையல் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் சீதாலட்சுமி மற்றும் ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் சூழலிலும், அதைக் கட்டுப்படுத்த முன்வராத ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்து முழக்கமிட்டனர். சங்கத்தின் துணைச் செயலாளர் எஸ். சித்ரா உட்பட ஏராளமான உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.</p>
