பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை முறியடிப்போம்! மாதர் சங்கத் தலைவர்கள் ஆவேச முழக்கம்!
1 hour before

பெண்களை போகப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை முறியடிப்போம்!

மாதர் சங்கத் தலைவர்கள் ஆவேச முழக்கம்!

சென்னை/மதுரை/திருப்பூர், ஜூன் 24- “பெண்களைச் சம உரிமை கொண்ட மனிதர்களாக மதிக்காமல், வெறும் உடலாகவும், அனுபவப் பொருளாகவும் பார்க்கும் பிற்போக்கான ஆணாதிக்க மனப்பான்மை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்தச் சிந்த னையை வேரோடு முறியடித்து, அரசியல மைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட வேண்டும்” என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் முழங்கியுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நீதி மற்றும் மறுவாழ்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை, மதுரை மற்றும் திருப்பூரில் மண்டல அளவிலான கண்டனப் பேரணி களும் விளக்கக் கூட்டங்களும் செவ்வா ய்க்கிழமை மாலை நடைபெற்றன.

முதல்வர் அமைதி காக்கக் கூடாது

சென்னையில் நடைபெற்ற பேரணி ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா பேசுகையில், “தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளும் கும்பல் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தவெக-வினர் திட்ட மிட்டுத் திசைதிருப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலை யத்தை அணுகும்போது, அவர்களுக்கு எதிராகவே காவல்துறை செயல்படு கிறது. வன்முறைகள் நிகழும்போது முதலமைச்சர் அமைதி காப்பது சரியல்ல. பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க 6 மாத அவகாசமெல்லாம் தர முடியாது; இதில் தவெக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.

பாலியல் வன்முறைக்கு முக்கியக் காரணமாக இருக்கும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும். அரசு 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவித்தாலும், அதில் பல கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகச் செய்தி கள் வருகின்றன. கல்வி வளாகம், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள் அருகே உள்ள மதுக்கடை களை உடனடியாக மூட வேண்டும். ‘சிங்கப்பெண் படை’ அமைக்கப்பட்டி ருந்தாலும், அதன் தொலைபேசி எண்கள் பல இடங்களில் செயல்படவில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனைச் சரிசெய்து, அப்படையை வலிமைப்படுத்த வேண்டும்” என்றார்.

சீருடை மாறினால் போதாது

திருப்பூரில் நடைபெற்ற பேரணி கூட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கே. பாலபாரதி பேசுகையில், “பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப்பெண்கள் படை’ உருவாக் கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பெண் கள் சீருடை மாறினால் மட்டும் போதாது. உண்மையாகக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தான் முதலில் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப் பட்டன. எனவே ஏற்கனவே இருக்கும் அரசு கட்டமைப்பை முழுமையாகப் பயன் படுத்தி குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில், இது போன்ற கொடூரங்களைத் தடுக்க மாதர் சங்கம் சார்பில் ‘இளம் பெண்கள் தற்காப்பு படை’ ஒன்றை உருவாக்கி, அவர்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளது” என்றார்.

காவல்துறையின் அலட்சியமே காரணம்

திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, “பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிக மோசமாக அதிகரித்துள்ளன. இதில் காவல்துறையின் செயல்பாடு அலட்சி யமாக உள்ளது. இக்குற்றங்களில் ஈடு படுவோர் பெரும்பாலும் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய வர்களாகவே இருக்கிறார்கள். காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதைத் தடுக்க முடி யும். மேலும், செல்போன்களில் வரும் ஆபாசமான நச்சுக் காட்சிகளையும் கருத்துகளையும் அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும். உள்ளூரில் யார் யார் போதைப்பொருள் விற்கிறார்கள் என்பது காவல்துறைக்கு நன்றாகவே தெரியும். எனவே, போதைப்பொருள் விவ காரத்தில் அரசு வெறும் நாடகமாடாமல் உறுதியான அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும” என வலியுறுத்தினார்.

17 போக்சோ வழக்குகள்

மதுரை பொதுக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் ஜி. ராணி பேசுகையில், “திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜூன் 1 முதல் 18-ஆம் தேதிக்குள் மட்டும் 17 போக்சோ வழக்குகள் பதிவாகியுள் ளன. விருதுநகரில் 1,384 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில், தமிழக த்தில் வெறும் 14 சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன. கிருஷ்ணகிரியில் 85 வயது மூதாட்டி, கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை என வயது வித்தி யாசமின்றி கொடூரங்கள் நடக்கின்றன. இவற்றுக்கு முக்கியக் காரணமான போதைப்பொருள் மற்றும் மது கலாச் சாரத்திற்கு அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்” என்றார்.

குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு

மதுரையில் மத்தியக்குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா தனது உரையில், “ஆணும் பெண்ணும் சமம் என்ற சிந்த னையைத் தந்தை பெரியார் விதைத்த மண்ணில், பெண்களை வெறும் போகப் பொருளாகப் பார்க்கும் மனநிலை மாற வேண்டும். தேசிய குற்ற ஆவணக் காப்ப கத்தின்படி, 2024-இல் பெண்கள் மீது 4,41,534 குற்றங்கள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதில் 27 சதவீதம் குடும்ப வன்முறையாகும். பெண்களின் அர சியல் பங்களிப்பை இழிவுபடுத்துவதை ஆணாதிக்க சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரி வித்தார்.

தொடர்ந்து, மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் பேசுகையில், “திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்தபோது, மாதர் சங்கத்தின் முற்றுகைப் போராட்டத்தால் தான் அச்சிறுமி மீட்கப்பட்டார். தியாகராஜர் பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடி வருகி றோம். போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கூடுதல் சிறப்பு நீதி மன்றங்களை அமைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மத்தியக்குழு உறுப்பினர் ஆர். சசிகலா பேசுகையில், “நாட்டில் குழந்தை கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் வேளையில், முதலமைச்சர் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது. தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலை யத்திலேயே பெண் காவலர் ஒரு வருக்குப் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடி நட வடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாகத் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வெடிக்கும்” என எச்சரித்தார்.

மத்தியக்குழு உறுப்பினர் எஸ். லட்சுமி பேசுகையில், “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்குக் கூடுதல் அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல. விருதுநகர் சூலக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலேயே ஒரே நாளில் 5 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி யுள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.