தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில் வேலையை உறுதிப்படுத்துக! தமிழகம் முழுவதும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

9 Jul 2026, 8:54 pm
‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில் வேலையை உறுதிப்படுத்துக! தமிழகம் முழுவதும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில் வேலையை உறுதிப்படுத்துக! தமிழகம் முழுவதும் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோயம்புத்தூர், ஜூலை 9 - விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கத்தில் (விபி ஜி ராம் ஜி), கிராமப்புற ஏழை மக்கள் அனை வருக்கும் வேலை வழங்க வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், வியாழக்கிழமை யன்று தமிழகம் முழுவதும் பெருந்தி ரள் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி.பிர மிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா, பொருளாளர் ஜி.ராணி, மத்தியக்குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.சசி கலா, லட்சுமி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா உள்ளிட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர். இதனொரு பகுதியாக, கோவை மாவட்டம் கோவை கிணத்துக்கடவு அண்ணா சிலை திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா பங் கேற்று உரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெ. உஷா, மாவட்டப் பொரு ளாளர் கே.தங்கமணி, மாநிலக்குழு உறுப்பினர் எம். அமுதா, தாலுகா செயலாளர் என். ரேவதி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர். பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க பொருளாளர் கே. மகாலிங் கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கிண த்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.