மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
12 Jun 2026, 10:27 pm
<p><strong>மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூன் 12- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எலச்சி பாளையத்தில் நூதன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழ கம் முழுவதும் மாதர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட இலுப்பிலி கிராமம் மாரப்பம்பாளையத்தில் மாதர் சங்கத்தினர் வெள்ளியன்று விறகு அடுப்பில் சமையல் செய்து, எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றியத் தலை வர் எஸ். லட்சுமி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ராணி, மாவட்டச் செயலாளர் செல்வராணி, ஒன்றி யப் பொருளாளர் வசந்தா ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். இதில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் ஜி. பழனியம்மாள், ஒன்றியச் செயலாளர் ஆர். ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முடிவில், கிளைத் தலைவர் சித்ரா நன்றி கூறினார்.</p>
