மகாத்மா பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை தொடர வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
54 minutes before
<p><strong>மகாத்மா பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தை தொடர வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 9- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண் டும் என வலியுறுத்தி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழனன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடதுசாரிகளின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச்சட்டம், கோடிக்க ணக்கான கிராமப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண் கள், பட்டியலின மற்றும் பழங்குடி யினரின் குறைந்தபட்ச வாழ்வாதா ரத்திற்கு பாதுகாப்பு அரணாக இருந்து வந்தது. தற்போது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, இத்திட்டத் திற்கு பதிலாக ‘விபி ஜி ராம்ஜி’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. பல்வேறு குளறுபடிகளு டன் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம், கிராமப்புற மக்களின் வாழ் வாதாரத்திற்கும், கிராமப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கையாகும். ஆபத் தான திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பை 200 நாட்க ளாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் எஸ். வாலண்டினா, மாவட்டச் செயலா ளர் ஆர்.மல்லிகா, மாவட்டப் பொரு ளாளர் சரண்யா, துணைத்தலைவர் கள் எஸ்.நிர்மலா ராணி, எஸ்.தமிழ் மணி, துணைச்செயலாளர் வளர் மதி உட்பட பலர் கலந்து கொண்ட னர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சித்ரா தலைமை வகித் தார். நிர்வாகிகள் மாலினி, வசந்தி, துரையம்மாள், ஈஸ்வரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தின் முன்பாக நடை பெற்ற போராட்டத்திற்கு மாதர் சங் கத்தின் தாலுகா தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ராதா, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செய லாளர் வடிவேல், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
