மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
29 Sept 2026, 10:54 pm
<p><strong>மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மேட்டுப்பாளையம், செப்.29-வீரமணி மீதான பாலியல்வன்முறை குற்றச்சாட்டு சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாதர் சங்கத்தினர் மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சம்பவத்தில் </p><p>கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கத்தினர் திங்களன்று கோவை, மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தாலுகா செயலாளர் கே.ஜீவாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் உஷா, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் கே.தங்கமணி, மாவட்ட நிர்வாகி புஷ்பலதா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட குழு உறுப்பினர் லதா நன்றி கூறினார்.</p>
