தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக் கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7 Jun 2026, 12:19 am
பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக் கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்கக் கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூன் 6- பெண்கள் மீதான வன்முறை களை தடுக்கக் கோரி குமாரபாளை யத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் 12 வயது மற்றும் மூன்று வயது என இரண்டு குழந்தை கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். இதனையடுத்து பாதிக் கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் குமாரபாளையத்தில் சாலை மறி யல் போராட்டம் உள்ளிட்டவற்றை மேற்கொண்ட நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு முதியவர்கள் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப் பட்டு இருவரும் கைது செய்யப் பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த விவ காரம் பெரும் அதிர்வலையை ஏற்ப டுத்திய நிலையில், தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கி றது. எனவே இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கைது செய்யப்ப டும் குற்றவாளிகளுக்கு கடுமை யான தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சங்க மாவட்டத் தலைவர் பி. ராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா கண்டன உரையாற்றி னர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.செல்வராணி உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.அசோகன், தங்கமணி, எம். ஆர்.முருகேசன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.