காவேரிப்பட்டினம், ஓசூரில் 100 நாள் வேலை கேட்டு மாதர் சங்கம் மனு
13 Jul 2026, 12:33 am
<p><strong>காவேரிப்பட்டினம், ஓசூரில் 100 நாள் வேலை கேட்டு மாதர் சங்கம் மனு</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 12- காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் என்.தட்டக்கல், பாரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பி.பலனம்பாடி பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு முறையாக 100 நாள் வேலை வழங்கக் கோரி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் துணை வட்டாட்சியர் பெருமாளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், காவேரிப்பட்டினம் ஒன்றி யத்தில் வசிக்கும் மலைவாழ் பெண்க ளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தகுதியுள்ள அனை வருக்கும் புதிய வேலை அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலும், தற்போதைய விலை வாசி உயர்வுக்கு ஏற்ப, 100 நாள் வேலைத் திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை 325 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.எம்.இராதா தலைமையில், சங்க நிர்வாகிகள் ஆர்.புனிதா, கவிதா, அபிராமி உள்ளிட்டோர் உடனிருந்து தங்கள் கோரிக்கைகளை துணை வட்டாட்சியரிடம் விரிவாக எடுத்துரைத்தனர். ஓசூர் ஒன்றியத்தில் மனு ஓசூர் ஒன்றியம் பாகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை வழங்க கோரி ஓசூரில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கு மாதர் சங்கர் மாநில பொருளாளர் ஜி.ராணி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் டி.எம்.இராதா,நிர்வாகிகள் கவிதா,புனிதா,தனலட்சுமி கலந்து கொண்டனர்.</p>
