‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை திரும்பப் பெற மாதர் சங்கம் கோரிக்கை
13 Jul 2026, 9:47 pm
<p><strong>‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தை திரும்பப் பெற மாதர் சங்கம் கோரிக்கை</strong></p><p>விபி ஜி ராம்ஜி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்கக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக, நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ரோஜாமணி தலைமை வகித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், மாதர் சங்க மாநில துணைச் செயலாளருமான டி.லதா, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.வளர்மதி, தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர். 300 மனுக்கள் ஊராட்சி அதிகாரியிடம் கொடுக்கப்பட்டன.</p>
