மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1 Jun 2026, 11:44 pm
<p><strong>மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஈரோடு, ஜுன் 1- அந்தியூர் பகுதியில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வலியு றுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அந்தியூர், பேட்டைக்காடு ரோடு, பேட்டை பெரு மாள் கோயில் எதிரில் அரசு மதுபானக் கடை எண்.3804 செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையால் இப் பகுதி மக்கள் நாள்தோறும் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த கடையை அகற்ற வலியு றுத்தி தொடர்ந்து மாதர் சங்கத்தினர் முறையிட்டு வரு கின்றனர். இருந்தபோதும், அதிகாரிகள் கண்கொள் ளாத போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து திங்களன்று மதுக்கடை முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், அந்தியூர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான எஸ்.கீதா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ஜெ. அருந்ததி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில், திர ளான பெண்கள் பங்கேற்றனர். முடிவில் கோகிலா நன்றி கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கீதா, 300 மீட்டர் தூரத்திற்குள் 3 கோயில்கள் இப்பகுதியில் உள்ளது. அரசு மருத்துவமனை உள்ளது. பலமுறை ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இக்கடையை அகற்ற வேண்டும் என மனு அளித்துள்ள னர். இருந்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பள்ளிக்குச் செல்கிற தடம், பேருந்து நிலையம் அருகில் உள்ளது. சில நபர்களின் செல்வாக் கின் காரணமாக மதுக்கடையை அகற்ற அதிகாரி கள் அச்சப்படுகின்றனர். தற்போது கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். ஒரு வாரத்துக்குள் கடையை அகற்றவில்லையெனில், மாதர் சங்கம் முற்றுகை போராட்டத்தை நடத்தி கடையை அடைப்போம் என் றார்.</p>
