விலைவாசி உயர்வுக்கு எதிராக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
29 Oct 2026, 11:26 pm

விலைவாசி உயர்வுக்கு எதிராக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை, அக்.29-விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ஏ.ரீட்டா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.தேவி கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் என்.தனலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர்கள் இ.அலமேலு, உள்ளிட்ட முன்னணி மாவட்டக்குழு தோழர்கள் பங்கேற்றனர்.

கோரிக்கைகள்

அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உடனடியாக குறைத்திடு, உணவு பொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்க அனுமதிக்கும் கொள்கையில் மக்களின் உணவு பாது காப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நடவடிக்கை எடு, ஏழை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் மலிவு விலையில் வழங்கிடு, நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்திடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் வி.சந்திரா, எஸ்.சந்தனவள்ளி, ஆர்.பரிமளா, கே.அஞ்சலை, ஜி.பத்மா, பி.கவிதா, இ.மீனா, ஏ.ஆனந்தி, கே.மாரி யம்மாள் உள்ளிட்ட வட்ட, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.