முந்தய பக்கம்

திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: மாதர் சங்கம் மனு

9 Jul 2026, 11:28 pm
திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு:   மாதர் சங்கம் மனு
<p><strong>திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: மாதர் சங்கம் மனு</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 9 – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை ஜிபி ராம்ஜி என மாற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் மற்றும் விவசாயத் தொழி லாளர்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்க நிர்வாகிகள் சரஸ்வதி, அன்பரசி, சசிகலா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அன்பழகன் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram