முந்தய பக்கம்

தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் மனு

9 hours before
தெருவிளக்கு வசதி செய்து  தரக்கோரி மாதர் சங்கத்தினர் மனு

தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் மனு

ஈரோடு, செப். 14-பவானிசாகர் அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்டது வெள்ளியம்பாளையம். கொத்தமங்களம் ஊராட்சிக்குட்பட்ட இக்குடியிருப்பில் 9 மின் கம்பங்கள் உள்ளன. அதில் ஒரு மின் விளக்கும் இல்லை. ஒரு வீதியில் மின் கம்பமே இல்லை. இதனால் இரவு நேரங்களில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடை அப்பகுதியில் செயல்படுவதால் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே மின் கம்பங்கள் அமைத்து புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.அருந்ததி, ஒன்றிய தலைவர் ராபியா, கிளை செயலாளர் எம்.சித்ரா உள்ளிட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram