முந்தய பக்கம்

சுப்பிரமணிய நகர் மக்களுக்குக் குடிமனை பட்டா வழங்க மாதர் சங்கம் மனு

19 Jul 2026, 10:53 pm
சுப்பிரமணிய நகர் மக்களுக்குக் குடிமனை பட்டா வழங்க மாதர் சங்கம் மனு
<p><strong>சுப்பிரமணிய நகர் மக்களுக்குக் குடிமனை பட்டா வழங்க மாதர் சங்கம் மனு</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 19- திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூ ராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணிய நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டை புறம் போக்கு நிலத்தில் வசித்து வரும் 10 குடும்பங் களுக்குக் குடிமனை பட்டா வழங்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் பொன்னேரி வட்டாட்சியரிடம் ஜூலை 15 அன்று மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, பொன்னேரி பகுதி பொருளாளர் எஸ்.நாகலட்சுமி, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகி கவிதா, விதொச மாவட்ட தலைவர் இ.தவமணி மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். நீண்ட காலமாக அந்தப் பகுதியில் குடி யிருந்து வரும் தங்களுக்கு அரசு உரிய முறை யில் குடிமனை பட்டாக்களை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram