தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளபிரான்புரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல மாதர் சங்கம் ஆட்சியரிடம் மனு

9 Jul 2026, 11:33 pm
கள்ளபிரான்புரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள்  நின்று செல்ல மாதர் சங்கம் ஆட்சியரிடம் மனு
<p><strong>கள்ளபிரான்புரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல மாதர் சங்கம் ஆட்சியரிடம் மனு</strong></p><p>செங்கல்பட்டு, ஜூலை 9– சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளபிரான்புரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எம்.வீரப்பனிடம் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் யு.அனுசியா மற்றும் மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி ஆகியோர் இந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினர். மதுராந்தகம் தாலுகா, கள்ளபிரான்புரம் பேருந்து நிறுத்தத்தை வள்ளுவ பாக்கம், நெய்குப்பி, சூறை, சித்தாலமங்கலம், புதுப்பட்டு, மேலுமா, அத்தி மானம் மற்றும் ஜானகிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,000 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன. தினசரி வேலைக்குச் செல்லும் 1,000-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, மது ராந்தகம் தாலுகா அலுவ லகம், நீதிமன்றம், காவல் நிலையம், வங்கி போன்ற இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தையே நம்பியுள்ளனர். இருப்பினும், செங்கல் பட்டு - மதுராந்தகம் வழித் தடத்தில் இயங்கும் 121, 81V, 81M, 81G, 77C, 100, 100C ஆகிய பேருந்துகள் கள்ள பிரான்புரம் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதாகக் குறிப்பிட்டுள்ள மாதர் சங்கத்தினர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு பணிமனைகளைச் சார்ந்த பேருந்துகள் இந்த நிறுத்த த்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.