ஆளுநர் உரைக்கு மாதர் சங்கம் அதிருப்தி ரூ. 2500 உரிமைத் தொகை, 6 சிலிண்டர் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்!
20 Jun 2026, 11:54 pm

ஆளுநர் உரைக்கு மாதர் சங்கம் அதிருப்தி ரூ. 2500 உரிமைத் தொகை, 6 சிலிண்டர் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்!

சென்னை, ஜூன் 20 - தமிழக அரசின் ஆளுநர் உரையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற் கான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலை வர் ஜி. பிரமிளா, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆற்றிய உரை என்பது, புதிய அரசின் கொள்கைகள், முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்களை வெளிப் படுத்தும் முக்கிய ஆவணமாகும். அரசின் கொள்கை நோக்கங்கள் மட்டுமின்றி, தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறி விப்புகளும் இடம்பெறுவது வழக்கம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, பெண் களின் பொருளாதார சுதந்திரத்தைப் பாதுகாக்க மகளிர் உரிமைத்தொகை ரூ. 2500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 சமையல் எரி வாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பன போன்ற தவெக-வின் வாக்குறுதிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.

எனவே, சட்டப்பேரவையின் முதல் ஆளுநர் உரையில் இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் ஆவ லுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், ஆளு நர் உரையில் மாதம் ரூ. 2500 மகளிர் உரி மைத்தொகை திட்டம் குறித்தோ, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் குறித்தோ எந்தத் தெளிவான அறிவிப்பும் இடம்பெறாதது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தி யுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் குடும்பச் செலவுகளின் பெரும் சுமையை பெண்களே தாங்கி வருகின்றனர்.

குறிப்பாக, குறைந்த வரு மானம் கொண்ட குடும்பங்கள், அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்கள், தனிப் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கிராமப்புற பெண்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மகளிர் ஆகியோருக்கு தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் தேர்தல் அறிவிப்புகளாக அல்லாமல் வாழ்க்கைத் தேவைகளோடு தொடர்புடைய முக்கியமான நம்பிக்கைகளாக உள்ளன. எனவே, தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு காலதாமதமின்றி நிறைவேற்றுவதற்கான தெளிவான கால அட்டவணையை அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக மாதம் ரூ. 2500 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை யும், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண் டர்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.