இழிவான விமர்சனத்தில் இறங்கும் தவெகவினருக்கு மாதர் சங்கம் கண்டனம்
25 Jun 2026, 11:00 pm

இழிவான விமர்சனத்தில் இறங்கும் தவெகவினருக்கு மாதர் சங்கம் கண்டனம்

கோயம்புத்தூர், ஜூன் 25 - சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது இணைய தளங்களில் இழிவான விமர்சனங் களை முன்வைக்கும் தவெகவினரின் போக்கைக் கண்டிப்பதாகவும், இத்த கைய மிரட்டல்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒருபோதும் அஞ்சாது என்றும் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் அ.ராதிகா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதி கரித்து வரும் பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான வன்கொடுமை கள் குறித்து கோவையில் வியாழ னன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:

பெருகும் வன்கொடுமைகளும் போதை கலாச்சாரமும்

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பெண்கள், குழந் தைகள் மீதான பாலியல் வன்கொடு மைகள் அச்சமூட்டும் வகையில் அதி கரித்துள்ளன. சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம், தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விபரீதம், அன்னூரில் 25 வயது பெண் சடலம் கிணற்றில் வீசப்பட்டது மற்றும் சுகு ணாபுரம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது போன்ற தொடர் சம்பவங்களை மாதர் சங்கம் மிகக் கவலையோடு பார்க்கிறது. இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெண்ணுக்கு ஆதரவாக நிற்பதை விடுத்து, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்டோருக்கு எதிராகவும் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட் களே இக்குற்றங்களுக்கு முக்கியக் காரணமாகும். 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு அறிவித்தாலும், கோவையில் இன்னமும் பள்ளி, வழி பாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவ மனைகள் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும்.

தவெகவினரின் அத்துமீறலும் சட்டம்-ஒழுங்கு பலவீனமும்

ஸ்ரீவைகுண்டத்தில் பாலியல் குற்றத்தில் தவெக சட்டமன்ற உறுப்பி னர் சரவணன் ஈடுபட்டதாக அக்கட்சி யின் பெண் நிர்வாகி புகார் அளித்தும், இதுவரை முதலமைச்சர் அதில் தலை யிடவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணே அக்கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாதர் சங்கம் நடத்திய பேரணியைத் தொடர்ந்து, தவெக ஆதரவாளர்கள் இணை யத்தில் பெண்களை மிக இழிவாக விமர்சித்து வருகிறார்கள். கண்மூடித்த னமாக ஜனநாயகத்திற்கு எதிராக அத்துமீறும் தவெகவினர், கோவை யிலும் காவல் நிலையப் பெயரை மறைக்கும் வகையில் பேனர் வைத்துத் தங்களைக் காவல்துறைக்கு மேல் அதி காரம் படைத்தவர்களாகக் காட்ட முயல்கிறார்கள். விமர்சனங்களை ஏற்கும் மன நிலை அவர்களிடம் இல்லை. நடிகை திரிஷா மட்டுமன்றி முதலமைச்சரின் மனைவி சங்கீதா குறித்து இணை யத்தில் பேசப்படும் அவதூறுகளும் கண்டிக்கத்தக்கவை. அரசின் ‘சிங்கப் பெண் படை’ அமைப்பை வரவேற்கி றோம்; ஆனால், ‘துப்பட்டா அணி யுங்கள், உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள்’ என்று அந்தப் படை, பெண்களுக்கு பிற்போக்குத்தன மாக அறிவுறுத்துவதை ஏற்க முடி யாது. காவலர்களுக்குப் பாலின சமத்து வம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா கூறினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது மாதர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜெ.உஷா, பொரு ளாளர் கே.தங்கமணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜலட்சுமி, எம்.அமுதா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.