டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
23 Sept 2026, 8:32 pm

டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

சென்னை, செப். 23 –டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடங்களை அமைத்து நடத்த அனுமதிக்கப்படும் என்றும், இதற்கானபுதிய டெண்டர் விடப்படும் என்றும்அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் பார்களில் சுகாதார மற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவே உணவுக்கூடங்களை அமைக்க அனுமதிப்பதாக அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

உணவின் தரத்தைக் கண்காணிப்பதற்காக மதுபானக் கூடங்களையே உணவுக் கூடங்களாக விரிவுபடுத்து வது எந்த வகையிலும் தீர்வாகாது என்றுஅவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் குடும்பங்கள் பாதிக்கப்படுவது, பெண்கள் மீது குடும்ப வன்முறை அதிகரிப்பதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கவலையளித்து வருவதாக அவர்கள் கவலை தெரி வித்துள்ளனர். இத்தகைய சூழலில், மது அருந்துவதற்கான இடங்களிலேயே உணவையும் வழங்குவதற்கான வசதிகளைஏற்படுத்துவது மதுபானக் கூடங்களின் செயல்பாட்டை மேலும் இயல்பாக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கையாகவே அமையும் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, குடும்பங்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசுமதுபான விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கைகளை உருவாக்கக் கூடாது என்று அவர்கள்வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் அமைப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்பை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து, டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்த அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும்என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.