எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி
12 Dec 2025, 3:12 pm
<p>திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, இந்திய சமுதாய நல நிறுவனம் இணைந்து உலக எய்ட்ஸ் தினவிழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. திருத்தணி அடுத்த கேஜி கண்டிகையில் இந்த பேரணியை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு நிர்வாக அலுவலர் சரஸ்வதி தொடங்கி வைத்தார். இந்திய சமுதாய நல நிறுவன மாவட்ட வள மேலாளர் செந்தில்குமார் உறுதிமொழி வாசித்தார். பேரணி நொச்சிலி சாலையில் தொடங்கி ஆர்கே மண்டபம் அருகில் நிறைவு செய்யப்பட்டது. உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோவில் ஓட்டி பேரணி நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் கரி முல்லா மற்றும் ஓட்டுநர்கள் இந்த சமூக பணியில் பங்கேற்றனர்.</p>
