தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறுகிய கால பணி நியமன முறையை ரத்து செய்க! அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளன மாநாடு வலியுறுத்தல்

10 May 2026, 11:06 pm
குறுகிய கால பணி நியமன முறையை ரத்து செய்க!  அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளன மாநாடு வலியுறுத்தல்

குறுகிய கால பணி நியமன முறையை ரத்து செய்க! அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளன மாநாடு வலியுறுத்தல்

சென்னை, மே 10 - குறுகிய கால பணி நியமன முறையை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளன மாநாடு வலியுறுத்தி யுள்ளது.

அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் 28 ஆவது தேசிய மாநாடு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மே 7 முதல் மே 9 தேதி வரை தலைவர் எஸ்.என்.பாதக் தலைமை யில் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். ஏஐடியுசி அகில இந்திய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் எளமரம் கரீம், எச்.எம்.எஸ். அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்பஜன் சித்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தீர்மானங்கள் பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேஷனாக மாற்றியதை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் விரோத தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்.

8 ஆவது ஊதிய குழுவில் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 69,000 பரிந்துரை செய்ய வேண்டும்.

பணிக்காலத்தில் குறைந்தபட்சம் 5 பதவி உயர்வுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

பாதுகாப்புத் து

றையில் குறுகிய கால பணி நியமன முறையை ரத்து செய்து அனைத்து காலி யிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் எஸ்.என்.பாதக் தலைவராகவும், பொதுச் செயலாளராக சி.ஸ்ரீகுமார், பொருளாளராக மோகன் எம்.ஹோல் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.