மோடி அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து எழுவோம்! உழைக்கும் மக்களுக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்
27 Oct 2026, 9:24 pm

மோடி அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து எழுவோம்! உழைக்கும் மக்களுக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்

சேலம் (எடப்பாடி), அக். 27 -பாஜக அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில் மக்களின் உரிமைகளைக் காக்கப் போராட்டங்கள் மிக அவசியமாகி உள்ளன; உழைக்கும் மக்கள்ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் அழைப்பு விடுத்தார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில், சங்கத்தின் 11-ஆவது தமிழ்நாடு மாநிலமாநாடு திங்களன்று மாலை பேரணி, பொதுக்கூட்டத்துடன் எழுச்சியுடன் தொடங்கியது.

தியாகிகள் நினைவுச் சுடர்கள் - கொடி பெறுதல்

செவ்வாயன்று தியாகிகள் சுடர், கொடி, கொடிமரம் பெறும் நிகழ்வுகள் நடைபெற்றன. விதொச மாநில துணைத்தலைவர் எம். முருகையன் தலைமையில் எடுத்துவரப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடரை, சட்டமன்ற உறுப்பினர் டி. லதாவிடமிருந்து, அகில இந்தியதலைவர் ஏ. விஜயராகவன் பெற்றுக் கொண்டார். திருத்துறைப்பூண்டியிலிருந்து மாநிலக்குழு உறுப்பினர் பி. கந்தசாமி தலைமையில் எடுத்துவரப்பட்ட தோழர் பி. சீனிவாசராவ் நினைவுச் சுடரை, மூத்த தலைவர் டி. வடிவேலுவிடமிருந்து, அகில இந்தியஇணைச்செயலாளர் வி. சிவதாசன் எம்.பி. பெற்றுக்கொண்டார்.

தலைஞாயிறு பகுதியிலிருந்து மாநில துணைத்தலைவர் ஜி. ஸ்டாலின் தலைமையில் எடுத்துவரப்பட்ட தோழர் பி.எஸ். தனுஷ்கோடி நினைவுசுடரை, மூத்த தலைவர் எம். நடராஜனிடமிருந்து மத்தியக்குழு உறுப்பினர் பி. வசந்தாமணி பெற்றுக்கொண்டார். மதுரையில் இருந்து மாநிலக்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ்வரன் தலைமையில் எடுத்து வரப்பட்ட தோழர் என். சங்கரய்யா நினைவுச்சுடரை, தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். மாநிலக்குழு உறுப்பினர் டி.சலோமி தலைமையில் புதுக்கோட்டையிலிருந்து எடுத்துவரப்பட்ட மாநாட்டுகொடியை, அகில இந்திய பொதுச்செயலாளர் பி. வெங்கட் பெற்றுக் கொண்டார். ஈரோடு மாவட்டம், நசியனூரில் இருந்து மாநிலக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் தலைமையில் எடுத்துவரப்பட்ட தோழர் பி. நாச்சிமுத்து நினைவுக் கொடி மரத்தை, மூத்த தலைவர் எல்.ஆர். சங்கரசுப்பு பெற்றுக் கொண்டார்.

கொடியேற்றத்துடன் துவங்கிய பிரதிநிதிகள் மாநாடு

விவசாயத் தொழிலாளர் களின் உணர்ச்சிமிகு முழக்கங்களுக் கிடையே, சங்கக் கொடியை அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.லாசர் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபிக்குச் செவ்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் எம். சின்னதுரை, மத்திய செயற்குழு உறுப்பினர் பூங்கோதை, மாநில நிர்வாகி பஞ்சலிங்கம் ஆகியோர் தலைமையில் பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார்; வரவேற்புக் குழுத் தலைவர் ஏ. ராமமூர்த்தி வரவேற்றார்; அகிலஇந்திய இணைச் செயலாளர் வி. சிவதாசன் எம்.பி. தொடக்கவுரை ஆற்றினார்.

கேரள நிலச் சீர்திருத்த முன்மாதிரி — விஜயராகவன்

முன்னதாக பொது மாநாட்டில் பேசிய ஏ. விஜயராகவன், விலைவாசி உயர்வால் ஏழை, தாழ்த்தப்பட்டமக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர் எனவும், ஏழைக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி, மருத்துவம்,தொழில்நுட்பக் கல்லூரி வாய்ப்புகள்சமமாகக் கிடைக்க வேண்டும் எனவும், அரசுப் பள்ளிகள், மருத்துவமனை களை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஒன்றிய பாஜக அரசு அதானி,அம்பானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், துறைமுகங்கள், விமான நிலையங்கள், இயற்கை வளங்கள் தனியார்வசம் செல்வது ஆபத்தானது எனவும் குறிப்பிட்டார். பங்குச் சந்தையும் பெரு நிறுவனச் செல்வமும் மட்டும் உயர்வது வளர்ச்சியல்ல; சாதாரண மக்களின் பொருளாதாரமும் உயர வேண்டும் என்றார்.

1957-இல் கேரளத்தில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்ட நிலச் சீர்திருத்தங்கள் ‘உழுபவனுக்கே நில உரிமை’ கிடைக்க வழிவகுத்ததையும், வீடு, கல்வி, சுகாதாரம், நில உரிமை மூலம் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதையும் சுட்டிக்காட்டிய அவர், கீழ்வெண்மணி உள்ளிட்ட வரலாற்றுப் போராட்டங்கள் நடந்த தமிழகத்தில் செங்கொடி இயக்கம் மேலும்வலுப்பெற வேண்டும் என்றார். வெறும் ஆட்சி மாற்றமன்றி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருளாதார, சமூக மாற்றங்களே உண்மையான தீர்வு எனக் கூறிய அவர், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதைத் தடுக்க வேண்டும் எனவும்,தில்லியில் பிரம்மாண்டத் தொழிலாளர்பேரணி திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். கிராமம்தோறும் இயக்கத்தைக் கட்டியெழுப்பி, நிலம், வேலை,கல்வி, மருத்துவம், சமூக நீதிக்கான போராட்டத்தைத் தொடர்வோம் என்றார்.

36 கோடி டன் உணவு; ஆனாலும் தீராத பசி-பி. வெங்கட்

சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. வெங்கட் பேசுகையில், நாட்டில் ஆண்டுக்கு 36 கோடி டன் உணவுத் தானியம் உற்பத்தியானாலும் ஏழை மக்களின்பசி முழுமையாகப் போக்கப்படவில்லை என்றார். எனவே, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு மாதம் 10 கிலோ அரிசி (ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ) வழங்கக் கோரிப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், சொந்தநிலமின்றித் தவிக்கும் விவசாயத் தொழி லாளர்களின் நிலை கவலைக்குரியது எனக்

குறிப்பிட்ட அவர், சுமார் 40 லட்சம் ஏக்கர் தரிசுநிலங்கள் உள்ள நிலையில், நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டு மனையும் சாகுபடி நிலமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றார்.

பெயரளவிலான நலத்திட்டங்கள், கோவிலில் படையல் வைத்து விட்டு அதை பக்தர்களே உண்பதைப் போல இருக்கக் கூடாது; உண்மையான பசியைப் போக்க வேண்டும் என்றார்.அரிசியுடன் அத்தியாவசியப் பொருட்களை யும் மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு இதை நடைமுறைப்படுத்தியதைப் போல நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறிய பி. வெங்கட், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர், டிசம்பரில் பிரச்சார இயக்கமும், ஜனவரியில் உணவுத் தானியக் கிடங்குகளை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்தார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பாஜக அரசு பலவீனப்படுத்துவதாகவும், 40 சதவீதநிதிச் சுமை மாநிலங்கள் மீது சுமத்தப்படுவதால், இத்திட்டம் முடங்கும் அபாயம் உள்ளதாகவும் கூறிய அவர், ஆண்டுக்கு 100 நாள் வேலையுடன் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 600 கூலி வழங்கவும், திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தவும் கோரினார். மதம் மாறிய தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக நீதிக்கு எதிரானது என்றும், பிரேசிலில் லூலாவின்வெற்றியை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.