விதொச மாநில மாநாடு நிறைவு:புதிய நிர்வாகிகள் தேர்வு
28 Oct 2026, 9:08 pm
<p><strong>விதொச மாநில மாநாடு நிறைவு:புதிய நிர்வாகிகள் தேர்வு</strong></p><p>சேலம் (எடப்பாடி), அக். 28 -அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 11-ஆவது மாநாடு திங்களன்று மாலை மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்துடன்எழுச்சியுடன் தொடங்கியது.செவ்வாய்க்கிழமை யன்று தோழர் பி.எஸ்.டி. நூற்றாண்டு நினைவரங்கில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ. விஜயராகவன், துணைத்தலைவர் ஏ. லாசர்,பொதுச்செயலாளர் பி. வெங்கட், இணைச்செயலா ளர் வி. சிவதாசன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.</p><p>இந்நிலையில், புதனன்று மாநாட்டின் நிறைவில் 85 பேர் கொண்ட புதியமாநிலக்குழு தேர்ந்தெடுக்க ப்பட்டது.இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக மா. சின்னதுரை,மாநிலப் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் வீ. மாரியப்பன் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.மலைவிளைபாசி, சி. துரைசாமி, ஜி. கணபதி, ஜி.ஸ்டாலின், ஏ.வி. அண்ணாமலை, கே. அருள்செல்வன், ஜி. இராஜேந்தி ரன், டி. சலோமி ஆகிய 8பேர் மாநிலத் துணைத்தலை வர்களாகவும், அ. பழனி சாமி, எம். முத்து, அ.து. கோதண்டன், எஸ். பூங்கோதை, எஸ்.பிரகாஷ், வி.உமாமகேஸ்வரன், பி. கற்பகம், பி. கந்தசாமி ஆகிய8 பேர் மாநிலச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.</p>
