விதொச சங்ககிரி தாலுகா மாநாடு சேலம், ஜூலை 6- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க
6 Jul 2026, 10:11 pm
<p><strong>விதொச சங்ககிரி தாலுகா மாநாடு</strong></p><p>சேலம், ஜூலை 6- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சங்ககிரி தாலுகா மாநாட்டில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா 10 ஆவது மாநாடு சந்தைப்பேட்டை சமுதாய கூடத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்க தாலுகா தலைவர் ஏ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்டத் தலைவர் ஜி.கணபதி துவக்கவு ரையாற்றினார். தாலுகா செயலாளர் ஆர். பழனிசாமி வேலை அறிக்கையை முன் வைத்தார். இதில், மாநிலக் குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட இணைச் செயலாளர் பழனியப்பன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ. ஆறுமுகம், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் சே.பவித்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், சங்ககிரி தாலுகாவில் குடிமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் தமிழக அரசு வீட்டு மனை நிலம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், தாலுகா தலைவராக ஆர்.பழனிசாமி, செயலாளராக ஆர்.பழனிவேல், பொருளாளராக டி.செந்தில்குமார் உள்ளிட்ட 11 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர் நிறைவுரையாற்றினர்.</p>
