விதொச தருமபுரி ஒன்றிய மாநாடு
18 Jul 2026, 10:17 pm
<p><strong>விதொச தருமபுரி ஒன்றிய மாநாடு</strong></p><p>தருமபுரி, ஜூலை 18- விவசாயத் தொழிலாளர் சங்க தருமபுரி ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கத் தின் தருமபுரி ஒன்றிய 5 ஆவது மாநாடு, தருமபுரி முத்து இல்லத்தில் சனியன்று நடை பெற்றது. கே.பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி அறிக் கையை முன்வைத்தார். மாவட்டச் செயலா ளர் எம்.முத்து சிறப்புரையாற்றினார். மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கள் டி.எஸ்.ராமச்சந்திரன், கே.பூபதி, விவசா யிகள் சங்க நிர்வாகி என்.கந்தசாமி, மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியத் தலைவர் பி. பழனி ஆகியோர் வாழத்திப் பேசினர். இம்மா நாட்டில், தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத் திற்கு, வீடு மற்றும் நிலத்தை வழங்கிய மூக்க னூர் கிராம மக்களுக்கு சட்டப்படியான இழப் பீடு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக மூக்கனூர் ஊராட்சி செயலாளராக இருந்து வரும் வெங்கட்ரமணணை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக பாஞ்சாலி, செயலாளராக வி.தமிழ் சேகர், பொருளாளராக தீ.மாரியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
