முந்தய பக்கம்

உழைப்பை இழித்துப் பேசுவதா? விதொச கண்டனம்

16 Jun 2026, 12:02 am
உழைப்பை இழித்துப் பேசுவதா? விதொச கண்டனம்
<p><strong> உழைப்பை இழித்துப் பேசுவதா? விதொச கண்டனம்</strong></p><p>அவிநாசி, ஜூன் 15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட தொழி லாளர்களை இழிவுபடுத்தி பேசிய அதி காரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக் கடிக்கு ஆளாகியுள்ளன. தொடர்ந்து வேலை வழங்குவதுடன், வேலை நாட்களை அதிகரித்து, ஊதியத்தை யும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி அஇ விதொச ஒன்றிய குழு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்த னர். முன்னதாக, மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளிடம் அங்கிருந்த அதி காரி ஒருவர் அலட்சியமாக நடந்து கொண்டதுடன், மரத்தடியில் தூங்கு பவர்களுக்கு இந்த சம்பளம் போதாதா? எனத் தொழிலாளர்களை கொச்சைப் படுத்தும் வகையில் பேசியதாக சங்கத் தினர் குற்றம்சாட்டினர். இது குறித்து அமைப்பின் மாவட்டத் தலைவர் சண்முகம் கூறுகையில், தொழிலாளர்களின் உழைப்பையும், வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் இழிவுபடுத்தும் வகையில் அதிகாரி பேசியது வன்மையான கண்டனத்திற் குரியது. தொழிலாளர்களைக் கொச்சைப்படுத்திய அதிகாரி மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினார். இந்நிகழ்வில் அஇவிதொச ஒன் றிய தலைவர் முருகேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, துணைத் தலைவர் குருநாதன் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram