தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாம்சங் தொழிலாளர் போராட்டம் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

10 Apr 2026, 5:30 am
சாம்சங் தொழிலாளர் போராட்டம் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

சாம்சங் தொழிலாளர் போராட்டம் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்

சென்னை, ஏப். 9- காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் பன்னாட்டு நிறுவனத்தில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து கடந்த அக்டோபர் 10, 2024 அன்று போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை அடக்க முற்பட்ட காவல்துறை, சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் சட்டவிரோதமாக கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்தது.

இதனை விசாரிக்க வந்த சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜனும் கைது செய்யப்பட்டார். கைதானவர்களை சட்டவிரோதமானது என்று கண்டனம் செய்த புதூர் குற்றவியல் நீதிமன்றம், நீதிமன்ற அதிகாரியை நியமித்து சார வாரண்ட் வழங்கி விசாரிக்க கட்டளையிட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வந்த வழக்கறிஞர்கள் ஆர். திருமூர்த்தி மற்றும் எஸ். குத்தீரநாத் ஆகியோர் மீது காவல் துறை பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளது.

இதனை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. தொழிலாளர்களின் உரிமையாகச் சட்டபூர்வமான வழியில் செயல்பட்ட வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தது, வழக்கறிஞர்களின் தொழில் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்காமல் பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.